சூடுபிடிக்கும் வேலூர் தொகுதி.. வேட்புமனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்! வாய்ப்பு எப்படி?
வேலூர்: லோக்சபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், வேலூர் தொகுதிக்கு போட்டியிடும் திமுகவின் சிட்டிங் எம்பி கதிர் ஆனந்த் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அவர் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து பேசியதை திமுகவினர் அதிக அளவு ஷேர் செய்து வருகின்றனர்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. திமுகவை பொறுத்த அளவில், 21 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில் இன்று வேலூர் லோக்சபா எம்பி கதிர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.

அரசியல் சலசலப்புகள் காரணமாக வேலூர் மாவட்டம் வழக்கத்தைவிட ஹாட்டாகவே இருக்கிறது. பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம் இறங்கியிருக்கும் நிலையில், அவருக்கு எதிராக கதிர் ஆனந்த் மீண்டும் களமிறக்கப்பட்டிருக்கிறார். கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் கதிர் ஆனந்த் ஜெயித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் அவரையே களமிறக்கியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
இருப்பினும் தொகுதிக்காக தான் செய்த பணிகளை கதிர் ஆனந்த் தொடர்ந்து பட்டியலிட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தயாரிக்கும் அவையில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியைக் கொண்டு வர சிலர் முயன்றார்கள். அதை கடுமையாக எதிர்த்து, தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றவர், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத். விருகம்பாக்கம் மாநாட்டில் கலந்துகொண்ட காயிதே மில்லத், அண்ணா உங்கள் தலைவர் மட்டுமல்ல, எங்கள் தலைவர் என்று கூறியிருந்தார்.
அதனால் பாடப்புத்தகத்தில், காயிதே மில்லத் வரலாறு இடம் பெற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தேன். இதற்காக நான் நாடாளுமன்றத்தில் அவமானப்படுத்தப்பட்டேன். என்னை வெற்றி பெறவைத்த வேலூர் மக்களுக்காக இந்த அவமானத்தை தாங்கிக் கொண்டது எனக்குப் பெருமை.
சிறுபான்மை இயக்கத்துக்கும், திமுகவுக்கும், தலைவர் கருணாநிதிக்குமான நட்பு என்பது காலம் காலமாக தொடர்கிறது. அது, தொப்புள் கொடி உறவு போன்றது
பெரியார் மண்ணில் எந்தக் கோயிலுக்கும் எந்தச் சேதாரமும் ஏற்பட்டதில்லை. ஆனால், இன்றைக்கு பக்தியை வியாபாரப் பொருளாக, அதுவும் அரசியல் வியாபாரப் பொருளாக ஆக்குவதற்கு பா.ஜ.க முயற்சிக்கிறது. பா.ஜ.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் சொல்வதற்கு சாதனைகளோ, கொள்கையோ இல்லை. அதனால்தான், மக்களின் ஆன்மிக உணர்வைத் தூண்டிவிட்டுக் குளிர்காய நினைக்கிறார்கள்.
அரசியலுக்கும் ஆன்மிகத்துக்குமான வேறுபாட்டை நன்கு உணர்ந்தவர்கள் தமிழக மக்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. அரசியல் என்பது மக்களின் உரிமை சார்ந்தது. ஆன்மிகம் என்பது மனம் சார்ந்தது. இந்த வேறுபாட்டை நன்கு உணர்ந்தவர்கள் வேலூர் மக்கள். மத்தியில் நம்முடைய பேச்சைக் கேட்கும் அரசு அமையும்போது, தமிழகத்தில் திராவிட மாடல் அரசு செயல்படுத்திய அனைத்து திட்டங்களும் இந்திய மக்கள் அனைவருக்கும் சென்று சேரும்.
பா.ஜ.கவின் மக்கள் விரோத சட்டங்களை துடைத்தெறிய ஓர் அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் கள்ளக் கூட்டணி அமைத்து வாக்கு கேட்க வருகிறார்கள். அவர்களை வேலூர் மக்கள் நிராகரிப்பார்கள் என்பது உறுதி" என்று பேசியுள்ளார். இந்த வீடியோவை திமுகவினர் அதிக அளவு ஷேர் செய்து வருகின்றனர்.
இவரை எதிர்த்து போட்டியிடும் ஏசி சண்முகம், முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். வேலூரில் முதலியார் மற்றும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். எனவே, சண்முகத்திற்கு போட்டியாக வன்னியர் சமூத்தை சேர்ந்த கதிர் ஆனந்தை நிறுத்துவதுதான் பொறுத்தமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு திமுக தலைமை மீண்டும் கதிர் ஆனந்துக்கு வாய்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவில் வேலூரில் யார் பக்கம் காற்று அடித்தது என்பது தெரிந்துவிடும்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications