திராவிடர் கழக துலாபாரம்! கி.வீரமணி எடைக்கு எடை பணக்கட்டு! உண்மைதான்! அசர வைத்த பெரியார் தொண்டர்கள்!
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற திராவிட கழகத்தின் சார்பில் சந்தா வழங்கும் நிகழ்ச்சியில், திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணியின் எடை எடைக்கு இணையாக பணக்கட்டுகள் விடுதலை நாளிதழ் சந்தவாக வழங்கபட்டது.
Recommended Video
திருப்பத்தூரில் மாவட்ட திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நடத்திய கலந்துரையாடல் கூட்டமும், திராவிட கழகத்தின் சார்பில் சந்தா வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான திராவிடர் கழக தொண்டர்கள், பல்வேறு அமைப்பினர், பெரியார் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கி.வீரமணி
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான விடுதலை நாளிதழுக்கு சந்தா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பேசிய வீரமணி, நீட் தேர்வை வைத்து மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைத்து வருகிறது. இதற்காக போராடும் ஒரே இயக்கம் திராவிட கழகம் தான் என்றார்.

சந்தா பணம்
முன்னதாக விடுதலை நாளிதழுக்கு சந்தா பணம் நிகழ்ச்சிக்காக வந்த திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு அந்த அமைப்பின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து மரியாதை செலுத்திய திராவிடர் கழகத்தினர் சந்தா வழங்கும் நிகழ்ச்சிக்காக வித்தியாசமான ஒரு ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

துலாபாரம்
அதாவது கோவில்களில் துலாபாரம் எனப்படும் எடைக்கு எடை காணிக்கை வழங்குவதை போல விடுதலை நாளிதழுக்கு வீரமணியின் எடைக்கு எடை பணக்கட்டுகளை வழங்க முடிவு செய்து இருந்தனர். அதன்படி மேடை அருகே ஒரு பெரிய தராசு அமைக்கப்பட்டு ஒருபுறம் கி வீரமணி அமர வைக்கப்பட்டார். மறுபுறம் பத்து ரூபாய் இருபது ரூபாய், 50 ரூபாய் உள்ளிட்ட நோட்டு கட்டுகள் அடுத்தடுத்து அடுக்கி வைக்கப்பட்டு எடை பார்க்கப்பட்டது.

எடைக்கு எடை பணம்
சுமார் 20 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் எடை சமமாக இருந்தது. அந்த சந்தா தொகை திராவிடர் கழக தலைவர் வீரமணியிடம் விடுதலை நாளிதலுக்கான சந்தா தொகையாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருப்பத்தூரை பொறுத்தவரையில் திராவிட கழகத்தினர் சுமார் 60 லட்சம் வழங்குவதாகவும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications