ஜோலார்பேட்டையிலிருந்து வந்தது முதல் ரயில் நீர்.. சென்னைவாசிகளின் இல்லம் தேடி வந்த காவிரி
Recommended Video
வேலூர்: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 2.50 லட்சம் லிட்டர் குடிநீருடன் புறப்பட்ட ரயில் வில்லிவாக்கம் வந்தடைந்தது.. இந்த தண்ணீர் குழாய் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.
சென்னையில் நிலவும் கடும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.65 கோடி நிதியினை அரசு ஒதுக்கியுது.

இதன்படி ஜோலார்பேட்டையில் இருந்து மேட்டுசக்கர குப்பத்தில்உள்ள தரை மட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை அருகே வரை 3.5 கிலோமீட்டர் தூரம் ராட்சத பைப் லைன் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் முழுவீச்சில் நடந்தது. நேற்று முன்தினம் சோதனை ஓட்டப்பட்டது. தண்ணீர் பார்சம்பேட்டைக்கு வெற்றிகரமாக வந்தது. அங்குகிருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள குழாய்கள் மூலம் ரயில்வே வேகன்களில் தண்ணீரை நிரப்பினர்.

தண்ணீர் நிரப்பட்ட வேகன்களை சோதித்த அதிகாரிகள், பாதுகாப்பு காரணங்களுக்காக வேகன்களில் முழுமையாக தண்ணீர் இருக்கக்கூடாது என்று முடிவு செய்து ஒவ்வொரு வேகன்களில் இருந்து சுமார் 30 ஆயிரம் லிட்டர் தண்ணீரை குறைக்க உத்தரவிட்டனர். இதன்படி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் மகேஷ் கொடியசைத்து குடிநீர் ரயிலை சென்னைக்கு இயக்கும் சேவையை தொடங்கிவைத்தார். வாழைத் தோரணங்கள், மலர் அலங்காரங்களுடன் பூஜைக்கு பிறகு குடிநீர் ரயில் புறப்பட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 2.50 லட்சம் லிட்டர் குடிநீருடன் காலை 7.20 மணி அளவில் புறப்பட்டது.


தற்போது வில்லிவாக்கம் வந்துள்ளது. இந்த நீர் அங்கு அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்ப்படுகிறது. ஒருநாளைக்கு தற்போது ஒரு டிரிப் மட்டும் ரயில் நீர் சென்னைக்கு வந்துள்ளது. விரைவில் படிப்படியாக டிரிப்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.

-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications