துரை தயாநிதி நலமுடன் உள்ளார்.. தவறான தகவலை நம்ப வேண்டாம்.. வேலூர் சிஎம்சி மருத்துவமனை விளக்கம்
வேலூர்: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி நலமுடன் இருப்பதாகவும், யாரும் அவருடைய உடல் நலம் குறித்து எந்தவித வதந்திகளையும் பரப்ப வேண்டாம் எனவும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க. அழகிரி. முன்னாள் மத்திய அமைச்சரான மு.க. அழகிரி தற்போது அரசியலில் இருந்து விலகி உள்ளார். மு.க. அழகிரியின் மகன் பெயர் துரை தயாநிதி. இவர் தொழில்அதிபராகவும், பட தயாரிப்பாளராகவும் உள்ளார்.

துரை தயாநிதி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அனுஷாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு ருத்ர தேவ் மற்றும் வேதாந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் குடும்பத்துடன் துரை தயாநிதி வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி துரை தயாநிதி அழகிரி திடீரென வீட்டில் மயங்கி சரிந்து விழுந்தார்.
இதையடுத்து அவரது வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பின்னர் பொது வார்டுக்கு மாற்றினார்கள். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி அழகிரி, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை நேரில் சென்று இருமுறை முதல்வர் முக ஸ்டாலின் பார்த்து விட்டு நலம் விசாரித்துவிட்டு வந்தார்.
மேலும் துரை தயாநிதிக்கு என்னென்ன மருத்துவமுறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல் நலம் பற்றியும் மருத்துவர்களிடமும் கேட்டு அறிந்து கொண்டார். வேலூர் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக துரை தயாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே துரை தயாநிதி உடல் நலம் குறித்து தவறான தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதையடுத்து, வேலூர் சிஎம்சி மருத்துவமனை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், "துரை தயாநிதி ஆரோக்யமாக உள்ளார். அவரது உடல் நிலை குறித்து பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது. இதுபோன்ற தகவலை யாரும் நம்ப வேண்டாம்.. பரப்பவும் வேண்டாம்" என்று தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications