5இல் மிஸ் ஆனது.. இப்போ 50 வயதில்.! அண்ணன், தம்பிக்கு காது குத்து! அதுக்கு இப்படியொரு காரணமா!
வேலூர்: வேலூர் அணைக்கட்டு பகுதியில் 50 வயதை கடந்து பேரப்பிள்ளைகளை எடுத்த சகோதரர்களுக்கு வெகு சிறப்பாக காதணி விழா நடந்துள்ளது. இந்த வயசுல காதுகுத்தா என கேட்கிறீர்களா.. இதற்கு ஒரு சுவாரஸிய காரணமும் இருக்கிறது. அது குறிக்கு பார்க்காலம்.
நம்ம ஊரில் இருக்கும் சில கலாச்சார பழக்க வழக்கங்களில் சில இனிமையானது. இவை எல்லாம் எப்போதுமே மாறாது.. நவீன தொழில்நுட்பங்கள் எந்தளவுக்கு வந்தாலும் இதை மக்கள் விடவே மாட்டார்கள்.

அப்படி நமது ஊர்களில் பின்பற்றப்படும் ஒரு விழா தான் காதனி விழா.. ஆண் பிள்ளையானாலும் சரி பெண் பிள்ளையானாலும் சரி குழந்தைகளுக்கு காது குத்தி அழகு பார்ப்பார்கள். சிறு வயதில் இப்படி அனைவருக்கும் காது குத்தி இருப்பார்கள்.
காது குத்து: இங்கு வேலூரில் அப்படித்தான் ஒரு காது குத்தும் விழா நடந்துள்ளது.. இதில் சுவாரஸியம் என்னவென்றால் அவர்கள் ஒன்னும் குழந்தைகள் இல்லை.. சொல்லப்போனால் பேரப்பிள்ளைகளையே எடுத்தவர்கள். அவர்கள் இருவருக்கும் 85 வயதான அவரது தாய்மாமன் முன்னிவையில் காது குத்தப்பட்டது. இது குறித்த படங்களும் வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வேலூர் அணைக்கட்டு பகுதியை அடுத்துள்ள ஏரிக்கொடி கிராமத்தில் வசித்து வரும் மூதாட்டி கண்ணம்மாள்.. 80 வயதான கண்ணம்மாளின் கணவர் கோவிந்தசமாி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். கண்ணம்மாளுக்கு மொத்தம் 5 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். தனது 5 பிள்ளைகளுக்குமே காலகாலத்தில் திருமணத்தையும் செய்து வைத்துவிட்டனர். அவர்களுக்கு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
80 வயதாகிவிட்டதால் கண்ணம்மாள் உடல்நிலை முன்பு போல இல்லையாம். இதற்கிடையே சில காலத்திற்கு முன்பு தனக்கு நிறைவேறாத ஆசை ஒன்று இருப்பதாக திடீரென தனது பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளார். அம்மாவுக்கு நிறைவேறாத ஆசையா.. என்னனு சொல்லுங்க செஞ்சிடலாம் என அவரது பிள்ளைகளும் கேட்டுள்ளனர். அதற்கு அவர், "இந்த வேண்டுதல் பல ஆண்டுகளாக நிறைவேற்றவே முடியாமல் போச்சு..
என்ன காரணம்: இதை வேண்டுதல்னு சொல்வதை விட என்னோட ஆசை இது.. இதை மட்டும் செஞ்சுட்டா ரொம்ப சந்தோஷமாக போகும்.. என் வயதில் பிறந்த 7 பேரும் சந்தோஷமாக இருக்கீங்க.. எனக்கும் இது நிம்மதியா இருக்கு.. அதேநேரம் இதுல 5 பேருக்கு அவங்க குழந்தைகளா இருந்த அப்போவே காது குத்தி அழகு பார்த்துட்டேன்.. ஆனா இரண்டு பேருக்கு மட்டும் அப்போ காது குத்த முடியாம போய்டுச்சு.. இப்போ எனக்கு 80 வயசு ஆகுது...
அவங்க இரண்டு பேருக்கும் நான் இருக்கும் போதே காது குத்தி அழகு பார்க்கணும்தான் என் ஆசை.. குலதெய்வ கோயிலில் வைத்து இரண்டு பேருக்கும் காது குத்தி அழகு பார்த்துட்டா ரொம்ப சந்தோஷம். நானு்ம நிம்மதியா போய்டுவேன்" என்று அவர் கூறியுள்ளார். இதை கேட்டவுடன் பிள்ளைகளுக்கு என்ன சொல்வதே என்றே புரியவில்லை. ஏனென்றால் அவர் காது குத்த வேண்டும் என சொன்ன மகன் முனிவேலுக்கு 55 வயதும் ராஜாவுக்கு 52 வயதும் ஆகிறது.
சிறப்பான விழா: இந்த வயசில் எப்படி மொட்டை அடிச்சு காது குத்த முடியும் என இவர்கள் முதலில் தயங்கியே உள்ளனர். இருப்பினும், அம்மாவின் நீண்ட நாள் ஆசை என்பதால் அதை நிறைவேற்ற அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அருகில் உள்ள குலதெய்வமான கன்னியம்மன் கோயிலில் இந்த காதனி விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. பேரப்பிள்ளைகளை எடுத்த அந்த இருவருக்கும் மொட்டை அடித்து காது குத்தியுள்ளனர்.
இதில் ஹைலாட்டான விஷயமே அவர்களின் 85 வயது தாய்மாமா தான். காது குத்தும் போது பொதுவாக மாமன் மாடியில் வைத்து தான் காது குத்துவார்கள். அது சாத்தியமில்லை என்ற போதிலும் அவரது தாய்மாமா இருவருக்கும் நடுவில் வந்து அமர்ந்து கொண்டார். அப்போது இருவருக்கும் மொட்டை அடித்து காது குத்தினர். குழந்தைகளுக்கு செய்வதை போலவே.. ஆட்டுக் கிடா கறி விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதை கண்டு மூதாட்டி கண்ணம்மாள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.. அவர் மட்டுமில்லை... விழாவுக்கு வந்த அனைவரும் மகிழ்ச்சியின் பூரிப்பில் இருந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications