வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 நாள் முகாம்.. களமிறங்கும் முதல்வர்.. முதல் நாளே ஸ்டாலினுடன் ஒரே தொகுதியில்.. பரபரக்கும் வேலூர்

Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.

வேலூர் லோக்சபா தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணி சார்பில், புதிய நீதி கட்சியின் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

Edappadi Palanisamy to campaign for AC Shanmugam in Vellore

இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட தமிழகம் முழுவதும் இருந்து அந்தந்த கட்சியினர் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், வேலூர் உள்ளிட்ட தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இப்போதே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.

லோக்சபாவில் ஆசாம் கான் 'ஆபாச பேச்சு'.. பாஜக பெண் எம்பி ரமா தேவி கடும் கோபம்.. எம்பிக்கள் அதிர்ச்சி லோக்சபாவில் ஆசாம் கான் 'ஆபாச பேச்சு'.. பாஜக பெண் எம்பி ரமா தேவி கடும் கோபம்.. எம்பிக்கள் அதிர்ச்சி

இந்நிலையில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும், 27, 28ம் தேதிகளிலும் ஆகஸ்ட் 2ம் தேதியன்றும் என மொத்தம் 3 நாள் பிரசாரம் செய்ய உள்ளார்.

வாணியம்படி, ஆம்பூர், கீழ்வைத்தியணான்குப்பம், குடியாத்தம் அணைக்கட்டு வேலூர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்வர் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை துவங்கும், அதே 27ம் தேதிதான், கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

English summary
Edappadi Palanisamy to campaign for AIADMK alliance candidate AC Shanmugam in Vellore Lok Sabha polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X