வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது தேர்தல் செலவின உதவி அலுவலர் போலீஸில் புகார்

Google Oneindia Tamil News

வேலூர்: திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் மீது தேர்தல் செலவின உதவி அலுவலர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

வேலூர் காட்பாடியில் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகனும் வேலூர் எம்பி தொகுதி வேட்பாளருமான கதிர் ஆனந்த் பள்ளி மற்றும் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர்.

Election expenditure officer gives complaint against Durai Murugans son Kathir Anand

அப்போது அவர்களது வீட்டிலிருந்து ரூ 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகரின் சிமென்ட் குடோனிலும் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூரில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் வழக்கு.. எப்ஐஆர் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு வேலூரில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் வழக்கு.. எப்ஐஆர் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு

அந்த பணக் கட்டுகளில் தொகுதி எண், வார்டு எண், தெரு பெயர் உள்ளிட்டவை இருந்தன. இந்த நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது தேர்தல் செலவின உதவி அலுவலர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர் கூறுகையில் வேட்புமனுவில் குறிப்பிட்டதை விட வருமான வரி சோதனையில் அதிக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.

English summary
Election expenditure officer gives complaint against DuraiMurgan's son Kathir Anand after amount seizure in his college.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X