ஒடுகத்தூர் அருகே விவசாய நிலத்தில் வீட்டிலிருந்த தந்தை- மகள் வெட்டி படுகொலை
வேலூர்: ஒடுகத்தூர் அருகே விவசாய நிலத்தில் வீட்டிலிருந்த தந்தை- மகள் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். மோப்ப நாய் வரவழைத்து போலீசார் கொலையாளியை தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஒடுகத்தூர் ஜார்தான் கொல்லை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மனைவி பாஞ்சாலையுடன் வேப்பங்குப்பம் ரங்கன் கொட்டாய் பகுதியில் அன்ஷர்பாஷா என்பவரது விவசாய நிலத்தில் கடந்த 25 வருடங்களாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் பொன்னுசாமி (42), அவரது மகள் 10 வயது சிறுமி தீபா ஆகிய இருவரையும் கழுத்து மற்றும் உடல் பகுதியில் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த இவர்களை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சென்ற வேப்பங்குப்பம் காவல்துறையினர் மற்றும் டிஐஜி காமினி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சிம்பா மோப்பநாய் உதவியுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு கொலையாளியை தேடி வருகின்றனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications