அரசு பள்ளியில் வளைகாப்பு ரீல்ஸ்..பள்ளி ஆசிரியை மீது பாய்ந்த ஆக்சன்.! ஆசிரியர்களுக்கு முக்கிய அட்வைஸ்
வேலூர் : வேலூர் பள்ளியில் மாணவிகள் வளைகாப்பு நிகழ்ச்சியை போன்று நடத்தி, மாணவிகள் ரீல்ஸ் வெளியிட்ட விவகாரம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வகுப்பு ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதோடு, தலைமை ஆசிரியர் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மூலம் சிறிய சிறிய வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் தான் ஒரு பிரபலமான நபராக மாற வேண்டும் என பல இளைஞர்கள் இளம்பெண்கள் சமூக வலைதளங்களில் உலாவுவதை பார்க்க முடிகிறது.

டிக்-டாக் வந்த பிறகு திடீர் செலிப்ரட்டிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. ஜிபி முத்து, திருச்சி சாதனா போன்றவர்கள் அந்த வகையை சேர்ந்தவர்கள் தான். ஆரம்பத்தில் திறமையை வெளிப்படுத்துகிறார்கள் என பலரும் பாராட்டிய நிலையில் நாட்கள் செல்லச் செல்ல அது ஆபாசமாக மாறத் தொடங்கியது.
இதையடுத்து பல நிறுவனங்கள் அதாவது பேஸ்புக் போன்றவையே ஷார்ட் வீடியோக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்கின. இதையடுத்து பலரும் தங்கள் வீடியோக்களை அதில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். சமையல் வீடியோக்கள், காமெடி வீடியோக்கள், கணவன் மனைவி நடனம், இசை என தொடர்ந்து அதில் வீடியோக்களை பதிவிட்டு வரும் இளைஞர்கள் இளம்பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது ஒரு புறம் இருக்க டாஸ்க் வீடியோக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் பட்டாகத்தியுடன் கேக் வெட்டுவது, பேருந்து ரயில்களில் சாகசம் செய்வது, காவல் நிலையத்தில் ரீல்ஸ் போடுவது என தேவையில்லாத வேலைகளை செய்து சிறைக்குச் செல்லும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது. குறிப்பாக பள்ளிகளில் மாணவ, மாணவிகள் அத்துமீறும் சம்பவங்களும், அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அரசு பள்ளியில் கத்தியுடன் அராஜகம் செய்த வீடியோ வெளியான நிலையில், மாணவர்கள் அதனை ரீல்ஸாக வெளியிட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக பள்ளியில் அரசு பள்ளியில் மாணவிகள், சக மாணவிக்கு வளைகாப்பு நடத்தியது போல ரீல்ஸ் வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவிகள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மற்றொரு மாணவி ஒருவருக்கு வளைகாப்பு நடத்துவது போல பள்ளியிலேயே நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
அது மட்டும் அல்லாமல் அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவிட்டதுடன் நேரிலும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில் மாணவிகள் வளைகாப்பு ரீல்ஸ் வெளியிட்டதை தொடர்ந்து மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பள்ளி மாணவ, மாணவிகளை கண்காணிக்க தவறியதற்காக, வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் பணியில் இருந்த மற்ற ஆசிரியர்களும் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவின்போது ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுடன் உட்கார்ந்து சாப்பிட வேண்டும், பள்ளிக்கு வரும் மாணவிகளை சோதிக்க வேண்டும், அவர்களது பாட புத்தகங்களை அவ்வப்போது சோதனை நடத்த வேண்டும், மாணவர்கள் பாடப்பிரிவு ஆசிரியர்கள் மாணவ மாணவிகளின் வருகை பதிவேட்டை முறையாக கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications