வேலூரில் கொட்டும் மழை.. நூற்றாண்டு கடந்து ஆகஸ்ட்டில் பெய்த அதிசயம்! அதிகபட்ச மழை இங்குதான்!
Recommended Video
வேலூர்: வேலூரில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மழை என கூறப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.
வேலூரில் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்கள்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நார்வே வானிலை மையமோ இன்னும் ஒரு வாரத்துக்கு விட்டு விட்டு மழை பெய்யும் என கூறியுள்ளது.

தண்ணீர் பிரச்சினை
என்னதான் வேலூர், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து சாலைகளில் தண்ணீர் வழிந்தோடினாலும் மக்கள் யாரும் அதை பெரிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் இத்தனை நாட்களாக அவர்கள் தண்ணீருக்காக பாடுபட்டு வந்தனர்.

பலத்த மழை
மேலும் வெப்பமும் வாட்டி வதைத்து வந்தது. இதனால் இந்த மழையை மக்கள் வரவேற்றனர். வேலூர், திருத்தணி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

போளூர்
தமிழகத்திலேயே வேலூரில்தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. வேலூரில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக கடலூரில் 13 செ.மீ. மழையும், அரியலூரில் 12 செ.மீ.மழையும், திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

மழை
வேலூரில் 17 செ.மீ. மழை என்பது மிகவும் அதிகமாகும். ஒரு நூற்றாண்டு கடந்து தற்போது ஆகஸ்ட் மாதத்தில் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளது. எப்போதும் வெயில் என்றால் வேலூரே தகிக்கும் என்று கூறும் நிலையில் தற்போது இந்த மழை மக்களுக்கு ஆறுதலை அளிக்கிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications