எச்.ஐ.வி ஊசி போட்டு.. நீளும் மாமியார்களின் அட்டகாசங்கள்.. வரதட்சணையால் வேலூர் ஐசியூவில் பரிதாப பெண்
வேலூர்: வரதட்சணை கொடுமை, கொலை முயற்சி வழக்கில், என்னுடைய கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையிலிருந்து கோரிக்கை விடுத்துள்ளார்.. கணவரால் மாடியிலிருந்து கீழே தள்ளப்பட்டு, 2 கால்களையும் இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த கோரிக்கையை தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க விடுத்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண்.
நாளுக்கு நாள் வரதட்சணை கொடுமை அதிகரித்து வருகிறது.. இப்போது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணும், வரதட்சணைக்கு ஆளாகியிருக்கிறார்.. யாரிந்த பெண்? என்ன நடந்தது?

திருவண்ணாமலை மாவட்டம்
2 வருடங்களுக்கு முன்பு திருமணமான நர்கீஸ் என்ற இளம்பெண்ணும் தற்போது வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்.. திருவண்ணாமலை மாவட்டம் சோழவரம் காவல்துறை எஸ்ஐ பாபா என்பவரின் மகன் காஜா ரவீக் என்பவரை நர்கீஸ் திருமணம் செய்துள்ளார்.
30 சவரன் நகைகள், 10 லட்சம் பணம் தந்து இந்த திருமணத்தை நர்கீஸ் வீட்டில் மிகவும் சிரமப்பட்டு நடத்தியுள்ளனர். ஒருகட்டத்தில் நர்கீஸை அடித்து வெளியே விரட்டி விட்டுள்ளனர்.. தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்ற நர்கீஸ், தன்னை அடித்து கொடுமைப்படுத்தியது தொடர்பாக ஜமாத் மூலமாக நர்கீஸ் புகார் செய்யவும், ஜமாத்தினர், கணவரை அழைத்து பேசி, சமாதானம் செய்து, அவருடன் நர்கீஸை அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது நர்கீஸை அழைத்து செல்லும்போதே, உன்னை என்ன செய்யறேன் பார் என்று சவால் விட்டபடி சென்றாராம் கணவர்.. வேலூர் மாவட்டத்தில் முல்லை நகரில் தனிக்குடித்தனம் சென்றபோதுகூட, வரதட்சணை கொடுமை நர்கீஸுக்கு நீண்டுள்ளது.
நசுக்கப்பட்ட விரல்கள்
இதுகுறித்து பிரபல சேனல் ஒன்றுக்கு நர்கீஸ் தந்துள்ள பேட்டியில், "என் கணவர் வரதட்சணை கேட்டு என்னை கடுமையாக தாக்கினார்.. இரும்பு ராடு வைத்தும் அடித்தார்.. மார்பிலும், வயிற்றிலும் என்னை எட்டி உடைத்ததுடன், என்னுடைய விரல்களை தன்னுடைய காலில் வைத்தே மிதித்து நசுக்கினார்..
இதையெல்லாம் வெளியே சொல்லக்கூடாது என்று என்னை பூட்டியே வைத்திருந்தனர்.. போனும் தரவில்லை. இந்த விஷயத்தை கஷ்டப்பட்டு என்னுடைய பெற்றோருக்கு தெரியப்படுத்தினேன்.
இரும்பு ராடு - தாக்குதல்
உடனே என்னுடைய கணவர், "உன் அப்பா, அம்மாவுக்கு ஏன் சொன்னே?" என்று கேட்டு என்னை மோசமாக அடித்தார்.. இனிமேல் என் பெற்றோரிடம் பேச மாட்டேன், மன்னிச்சிடுங்க என்று நான் கெஞ்சிட்டு இருக்கும்போதே, என்னை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டார் என் கணவர்.
என் கால்கள் இரண்டும் உடைந்துவிட்டன.. இடுப்பும் ஒடிந்துவிட்டது. இடது கால் தூளாகிவிட்டது.. ரத்தம் கொட்டுவதை பார்த்து என்னுடைய கணவர் சிரித்து கொண்டே நின்றார்.. அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் விரைந்து வந்து ஆம்புலன்ஸில் அழைத்து சென்று ஐசியூவில் அட்மிட் செய்தனர்..
விஷ ஊசி மிரட்டல்
உடனே கணவரும் மாமியாரும் ஐசியுக்கு வந்து, "நடந்ததை எதுவுமே வெளியே சொல்லக்கூடாது.. அப்படி சொன்னால் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம்.. நாங்கள் போலீஸ் தெரியுமில்ல? உன் அப்பா, அம்மாவையும் கொன்னுடுவோம்" என்று மிரட்டிவிட்டு சென்றார்கள்..
இதுவரை அவர்கள் மீது யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை.. 2 கால்களை இழந்து மருத்துவமனையில் சிகிச்சையில் அவதிப்பட்டு வருகிறேன்.. வரதட்சணை கொடுமை, கொலை முயற்சி வழக்கில், என்னுடைய கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையிலிருந்து கோரிக்கை விடுத்துள்ளார்..
நீளும் கொடுமைகள்
கடந்த ஒரே வாரத்தில், கேரளாவில் கொல்லத்தை சேர்ந்த 2 பெண்கள் வரதட்சணை கொடுமைக்காக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. இப்போது திருவண்ணாமலை பெண்ணும் உயிருக்கு போராடி வருகிறார்..
தென்மாநிலம் மட்டுமல்லாமல், வரட்சணை கொடுமை வடமாநிலங்களிலும் பெருகி வருகிறது.. சமீப நாட்களில் மட்டும் 4 பெண்கள் இறந்துள்ளனர்..
எச்ஐவி ஊசி - துயரம்
அதிலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசம், ஹரித்வார் மாவட்ட சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது.. ரூ.45 லட்சம் செய்து, அபிஷேக் என்பவருக்கு தங்களது மகளை திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால், ரூ.10 லட்சம் ரொக்கமும், மற்றொரு எஸ்யூவி காரும் வரதட்சணையாக வேண்டும் என்று மருமகளை தொந்தரவு செய்து, உச்சக்கட்டமாக மருமகளுக்கு எச்ஐவி தொற்று சிரின்ஜியால் ஊசி செலுத்திவிட்டார் மாமியார்..
மருமகளுக்கு நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகி, மருத்துவமனைக்கு சென்று செக்கப் செய்தபோதுதான், எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கு பிறகே சட்டரீதியான உதவியை நாடினார்கள்..
இன்றைய காலத்தில், எவ்வளவுதான் விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்ந்தாலும், சில பெண்களின் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது.. படித்த பெண்களுக்கே இந்த நிலைமை என்றால்? இதற்கெல்லாம் முடிவு கட்டுவதுபோல, வரதட்சணை கொடுமை சட்டத்தை அரசு தீவிரமாக்கினால் நல்லா இருக்கும்...!!












Click it and Unblock the Notifications