Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நைட்ஷோ சென்ற பெண் டாக்டர்.. கொடூரமாக சீரழித்த 3 "மைனர்" சிறுவர்கள்.. பாலாற்றங்கரையில் பயங்கரம்

டாக்டரை 3 சிறுவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: எதற்காகவோ விசாரிக்கவோ போய், வேறு விஷயம் வெடித்து வெளியே வந்தது வேலூர் போலீசுக்கே சற்று அதிர்ச்சிதான்..!

வேலூர் கலெக்டர் ஆபீஸ் எதிரே ஆஞ்சநேயர் கோயில் அருகில் நேற்று முன்தினம் இரவு 2 இளைஞர்கள் போதையில் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

ஒருவருக்கொருவர் அவர்கள் தடியால் தாக்கி கொண்டுமிருந்தனர்.. அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி போலீசார், 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்...

 கொள்ளையர்கள்

கொள்ளையர்கள்

அப்போதுதான் அவர்கள் இருவருமே வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.. இருவருமே போதையில் இருந்ததால், ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று தீவிரமான விசாரணையை துவங்கினர். வழிப்பறி கொள்ளை பற்றின வாக்குமூலத்தை இளைஞர்கள் 2 பேரும் சொல்லி கொண்டே வந்தபோதுதான், திடீரென பலாத்காரம் பேச்சு வந்தது.. இதனால் போலீசார் திகைத்துவிட்டனர்.. இந்த இளைஞர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு மருத்துவமனை பெண் ஊழியரை கூட்டு பலாத்காரம் செய்தார்களாம்.. இதுபற்றிய போலீஸ் தரப்பில் சொன்னதாவது:

 ஆண் நண்பர்

ஆண் நண்பர்

கடந்த 3 நாட்களுக்கு முன்பு காட்பாடியில் இந்த பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.. தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர், ஆண் நண்பருடன் நைட் ஷோ சினிமாவுக்கு சென்றுள்ளார்.. படம் பார்த்துவிட்டு நள்ளிரவு 12.30 மணியளவில் 2 பேரும் தியேட்டர் முன்பாக ஆட்டோவுக்காக காத்து நின்றனர்... அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோ வந்துள்ளது.. அதன் டிரைவர் அவர்களிடம் எங்கே செல்ல வேண்டும்? என்று கேட்கவும், இருவரும் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று சொல்லி உள்ளனர்.

 ஷேர் ஆட்டோ

ஷேர் ஆட்டோ

ஆனால், அந்த ஆட்டோவின் உள்ளே 3 ஆண்கள் ஏற்கனவே உட்கார்ந்திருந்தனர்.. அதனால் 2 பேரும் அதில் ஏறுவதற்கு தயக்கம் காட்டியிருக்கிறார்கள்.. உடனே டிரைவர், 'இது ஷேர் ஆட்டோ தான். ஏறுங்கள் என்று சொல்லவும், 2 பேரும் ஆட்டோவில் ஏறிக் கொண்டனர்.. வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே ஷேர் ஆட்டோ சத்துவாச்சாரியை நோக்கி திரும்பியுள்ளது. .. அந்த பெண் ஊழியர் ஆட்டோ டிரைவரிடம் கேட்டபோது, வழியில் பேரிகார்டு வைத்து அடைத்துள்ளனர்.

 பாலாற்றங்கரை

பாலாற்றங்கரை

சத்துவாச்சாரி சென்று ஆற்காடு சாலை வழியாக செல்லலாம் என்று சொல்லி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை வழியாக சென்றார். கலெக்டர் அலுவலகம் முன்பு, பாலாற்றங்கரை செல்லும் சாலை வழியாக ஆட்டோவை மறுபடியும் திருப்பினார் டிரைவர்.. இதனால் மீண்டும் அந்த பெண், தவறான வழியில் செல்வது பற்றி கேட்டார்.. உடனடியாக ஆட்டோவில் வந்தவர்கள் ஆண் நண்பரை அங்கேயே அடித்து நடுரோட்டில் இறக்கிவிட்டுவிட்டு, பாலாற்றங்கரையோரம் அந்த பெண்ணை மிரட்டி அழைத்து சென்றுள்ளனர்...

 உல்லாசம்

உல்லாசம்

அங்கிருக்கும் பார் அருகே வைத்து 3 பேர் அந்த பெண் ஊழியரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.. அவரிடம் இருந்த ஏடிஎம் கார்டு, செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு விரட்டியுள்ளனர்.. பிறகு, ஏஎடிஎம் கார்டு மூலம் அந்த பெண்ணின் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுத்துள்ளனர்.. அந்த பணத்தை வைத்து காஸ்ட்லி டிரஸ் வாங்கி கொண்டு, சாப்பாடு, மது வாங்கி சாப்பிட்டுள்ளனர்..

 மைனர் சிறுவர்கள்

மைனர் சிறுவர்கள்

மிச்ச பணத்தை பங்கிட்டுக் கொள்ளும்போதுதான், இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.. அப்போதுதான் போலீசில் பிடிபட்டுள்ளனர். பிடிப்பட்ட 3 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.. அந்த பெண்ணின் ஐடி மற்றும் ஏடிஎம் கார்டு வைத்து, அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அவரையும், அவரது நண்பரையும் நேரில் அழைத்து புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளோம்.. இதில் பெண்ணை பலாத்காரம் செய்த 3 பேருமே 18 வயதிற்குட்பட்ட மைனர் சிறுவர்கள்..

 மைனர்கள்

மைனர்கள்

இவர்கள் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள்தான்.. கஞ்சா போதைக்கும் அடிமையானவர்கள்.. பிடிப்பட்டவர்களிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணமும் ஏடிஎம் கார்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. இன்னும் 2 பேரை தேடி வருகிறோம். வேலூரின் மையப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+