தமிழ்நாட்டில் ஏரி குளங்களில் இலவசமாக வண்டல் மண், கிராவல், களி மண் எடுக்க விண்ணப்பிப்பது எப்படி?
வேலூர்: விவசாய நிலத்தை மேம்படுத்த, மண்பாண்டங்கள் செய்ய மற்றும் பொதுமக்களின் பொது பயன்பாட்டுக்கு தேவையான வண்டல், களி, கிராவல் மண் எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது ஏரி, குளங்களில் இருந்து இலவசமாக வண்டல், கிராவல், களி மண் எடுக்க அனுமதிபெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என வேலூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.
ஏரி, குளங்களில், விவசாய நிலத்தை மேம்படுத்தும் அடிப்படையில், மண்பாண்டங்கள் செய்தல் மற்றும் இதர பயன்பாட்டிற்கு மண் எடுக்க தகுதி வாய்ந்த ஏரி, குளங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பொது பயன்பாட்டுக்கு தேவையான வண்டல், களி, கிராவல் மண் எடுக்க அனுமதி பெற விரும்புவோர் tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து சம்மந்தப்பட்ட தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும். இந்த திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள திட்டம் ஆகும். அதேபோல் மண்பானை தொழில் செய்வோருக்கும் இத்திட்டம் உகந்தது ஆகும்.
இந்த திட்டம் குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விவசாய நிலத்தை மேம்படுத்த, மண்பாண்டங்கள் செய்ய மற்றும் பொதுமக்களின் பொது பயன்பாட்டுக்கு தேவையான வண்டல், களி, கிராவல் மண் எடுக்க அனுமதி அளித்துள்ளது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள ஏரி, குளங்களில், விவசாய நிலத்தை மேம்படுத்துதல், மண்பாண்டங்கள் செய்தல் மற்றும் இதர பயன்பாட்டிற்கு மண் எடுக்க தகுதி வாய்ந்த ஏரி, குளங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் பட்டியல் மாவட்ட சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உள்ளது.
இந்த ஏரி, குளம், குட்டைகளில் இருந்து பொதுமக்கள், மண்பாண்டம் செய்பவர்கள், விவசாயிகள் மண் பெறலாம். விவசாய தேவைகளுக்கு ஒரு ஏக்கருக்கு நஞ்சை நிலமாக இருந்தால் 75 கனமீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 மீட்டரும் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். பொதுமக்கள் வீடு கட்டுதல் உள்ளிட்ட தேவைகளுக்காக 30 மீட்டரும், மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை செய்வதற்கு 60 மீட்டரும் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.
வண்டல், களி, கிராவல் மண் எடுக்க அனுமதி பெற விரும்புவோர் tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து சம்மந்தப்பட்ட தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும். வண்டல், களி, கிராவல் மண்ணை தங்கள் கிராமத்தில் உள்ள ஏரி, குளத்தில் இருந்து பொதுமக்கள் எடுத்து பயன் அடையலாம்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
-
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications