எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் வேலை செய்ய சசிகலாவும் ஓபிஎஸ்ஸும் ரெடியா? கே.சி.வீரமணி கேள்வி
வேலூர்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றிணைய ஓபிஎஸ், சசிகலா தயாரா என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். அப்படி இணைய சம்மதம் என்றால் அதை அறிக்கை வாயிலாக தெரிவிக்க தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: வேலூர் லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தோல்வி அடைந்ததற்கு காரணம், அவர் அதிமுகவினரை துரோகி என்று விமர்சித்து எங்கள் வெறுப்பை அதிகமாக சம்பாதித்துவிட்டார்.
அவருக்கு இன்னும் கூடுதலான வாக்குகள் கிடைக்க வாய்ப்புகள் இருந்தன. ஏ.சி.சண்முகத்தின் செயல்பாடு, தான்த்தோன்றித்தனமான பேச்சுகள்தான் அவர் தோல்வியடைய காரணமாக அமைந்தது. அவருக்கு வேலூர் லோக்சபா தொகுதியில் அனுதாபம் இருந்தது. அவர் அதிமுகவோடு இருந்திருந்தால் 100 சதவீதம் நிச்சயம் வென்றிருப்பார்.
இந்தத் தேர்தலை பொருத்தவரைக்கும் தமிழக மக்கள் மத்தியில் காங்கிரஸா அல்லது பாஜகவா என்றுதான் பார்ப்பார்கள். அந்த வகையில் தமிழகத்தை பொருத்தமட்டில் பாஜக பெரும்பான்மை பெறவில்லை. தமிழக மக்களும் அதை விரும்பவில்லை. மோடி வருகை, அண்ணாமலையின் யாத்திரை, ராமர் கோயில் கட்டியது இதெல்லாம் மதவாதத்தைக் கொஞ்சம் பலப்படுத்தி மத உணர்வை அதிகப்படுத்தியதால் இந்த முறை பாஜகவுக்கு தமிழகத்தில் கொஞ்சம் கூடுதலாக வாக்குகள் கிடைத்துள்ளன.
அது போல் 2014ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்தி நாங்கள் பிரச்சாரம் செய்திருந்தோம். இதை மக்கள் உணர்ந்து வாக்களித்ததால்தான் 38 சீட்டுகளை வென்றோம். இந்த முறை நாங்கள் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை என மக்கள் நினைத்திருக்கலாம்.
ஆனால் அதிமுகவை மக்கள் வெறுக்கவில்லை. திமுகவை மக்கள் வெறுத்தாலும் அந்த வாக்குகளை பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் போட்டுவிட்டார்கள். எனவே திமுகவின் எதிர்ப்பு வாக்குகள்தான் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து கிடந்தது.
அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜகவை எங்களால் எதிர்க்க முடியவில்லை. மக்களின் நலனுக்காகவும் தமிழகத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் அவர்களுடன் இணக்கமான சூழலை கடைபிடிக்க வேண்டிய சூழல் இருந்தது. பாஜகவும் அதிமுகவிற்கு உறுதுணையாக இருந்தது.
அதனால்தான் 11 மருத்துவ கல்லூரிகளையும், 9 புதிய மாவட்டங்களையும் உருவாக்க முடிந்தது. விக்கிரவாண்டி தேர்தலை அதிமுக புறக்கணித்ததற்கு காரணம் ஈரோடு இடைத்தேர்தலில் நடந்த ஜனநாயக விரோத செயல்தான். மக்களை சுற்றுலா அழைத்துச் சென்றனர்.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என எந்த தொண்டர் கூறுகிறார்? எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் என கூறுகிறீர்கள்? ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் நாங்கள் முன் வைத்தோம். அப்போதுதான் ஜெயலலிதா இருந்தது போல் ராணுவ கட்டுப்பாட்டுடன் கட்சியை செயல்படுத்த முடியும். ஆனால் ஓபிஎஸ் உள்ளிட்டோர் அவர்களாகவே கட்சியை விட்டு போனார்கள்.
நாங்களாக யாரையும் அனுப்பவில்லை. இவர்களை எதன் அடிப்படையில் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள சொல்கிறார்கள். இவர்கள் திமுகவுக்கும் பாஜகவுக்கும் சாதகமாக இருந்து வருகிறார்கள். பாஜக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியுற்ற பிறகு ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கிறார்கள்.
இப்போது அவர்கள்தான் சொல்ல வேண்டும், "நாங்கள் ஆதரவு தருகிறோம். எப்போது தேவைப்பட்டாலும் உங்கள் அழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று"! சொல்வார்களா, அதிலும் சசிகலா, ஓபிஎஸ் உள்பட பிரிந்து சென்றோர் இதை சொல்வார்கள்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒருங்கிணைய தயாராக இருக்கிறோம் என அறிக்கை விடச் சொல்லுங்கள் பார்ப்போம். அதைவிட்டு விட்டு ஒன்று சேர வேண்டும் ஒன்று சேர வேண்டும் என்கிறார்களே தலைமை பதவியை அவர்களுக்கு கொடுக்க சொல்கிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications