சலித்து போன மனைவி.. மகளை திருமணம் செய்ய துடித்த தந்தை.. மறுத்த தாய் மர்ம மரணம்.. நடந்தது என்ன?
Recommended Video

வேலூர்: வாலாஜாப்பேட்டையில் மகள் உறவு உள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்கும்படி இரண்டாவது தந்தை கோரிய நிலையில் தாய் மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்து மேல்புதுப்பேட்டையை சேர்ந்த கல்பனாவிற்கும், காவேரிப்பாக்கம் பெரியகிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் திருமணமாகி 18 வயதில் மஞ்சு மற்றும் 10 வயதில் சுப்புலட்சுமி என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கல்பனாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த காவலர் குமரேசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த ரமேஷ், கல்பனாவை விட்டு சென்றுவிட்டார். இதையடுத்து குமரேசனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட கல்பனா தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.
[ஹனிமூன் சென்ற போது கோத்தகிரியில் வைத்து போட்டு தள்ள பிளான் செய்த அனிதா... 2 முறை எஸ்கேப் ஆன கதிரவன்]

வாரத்தில் ஒரு முறை
கல்பனாவும் மஞ்சும் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். குமரேசன் சென்னையில் பணியாற்றி வருவதால் வாரத்தில் ஒரு முறை வாலாஜாப்பேட்டைக்கு வந்து கல்பனாவை சந்தித்து விட்டு செல்வது வழக்கம்.

மறுப்பு
கல்பனாவை விட வயதில் சிறியவரான குமரேசனுக்கு மஞ்சு மீது ஒரு கண் இருந்தது. அவரை எப்படியாயினும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தார். இந்த ஆசையை கல்பனாவிடம் சொன்னபோது மகள் உறவு கொண்ட பெண்ணை எப்படி திருமணம் செய்து வைப்பது என கேட்டு மறுப்பு தெரிவித்தார்.

தூக்கில் தொங்கிய கல்பனா
இதனால் எப்போது ஊருக்கு வந்தாலும் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு குமரேசன், கல்பனாவை தாக்குவது வாடிக்கையாகி இருந்தது. இதனால் மனஉளைச்சலில் இருந்த கல்பனா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். சம்பவத்தன்று மஞ்சு வேலைக்கு சென்று விட்டு திரும்பிய போது வீட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்பனா தூக்கில் தொங்கிய நிலையில் மயக்கத்தில் இருந்தார்.

கோரிக்கை
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கல்பனா கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டார். தனது தாய் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார் என்றும் மஞ்சு வாலாஜாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் குமரேசன் போலீஸ் என்பதால் அவருக்கு எதிரான அந்த புகாரை யாரும் ஏற்கவில்லை. தனது புகாரை போலீஸார் எடுக்க வேண்டும் என மஞ்சு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications