கனவு காணுங்கள்.. கிண்டல் செய்த முதல்வர்.. ஒரே மாதத்தில் ஆட்சி கவிழும்.. சவால் விட்ட ஸ்டாலின்!
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடக்க உள்ள தேர்தல் காரணமாக தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இடையே தீவிர வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடக்க உள்ள தேர்தல் காரணமாக தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இடையே தீவிர வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்ட தேர்தல் அடுத்த வாரம் நடக்கிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது .
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணி சார்பில் இங்கு போட்டியிடுகிறார். திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று இருவரும் வேலூரில் பிரச்சாரம் செய்தனர்.

முதல்வர் என்ன சொன்னார்
நேற்று பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அவர் இனியும் கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டியதுதான். அரசின் திட்டங்கள் என்ன என்று தெரியாமலேயே ஸ்டாலின் அறிக்கை விடுவார்.

எத்தனை பேர்
திமுக ஒரு கார்ப்பரேட் கட்சி போல செயல்படுகிறது. நாங்கள்தான் சரியான அரசியல் இயக்கமாக இருக்கிறோம்.மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக இப்போது என்ன வாக்குறுதி தரும் என்று புரியவில்லை. பொய் வாக்குறுதி என்ற மிட்டாயை மக்களிடம் கொடுத்து பொய்யான வெற்றியை திமுக பெற்றது

முடியவே முடியாது
ஆனால் சட்டசபை இடைத்தேர்தலில் அவர்களால் அதை செய்ய முடியவில்லை. அவர் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. வேலூர் தேர்தல் ரத்து செய்யபட்டதற்கு திமுகதான் காரணம். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் நாங்கள் அவர்களை தோல்வி அடைய செய்வோம், என்று முதல்வர் பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின் பதிலடி
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின், திமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தவே வேலூர் தேர்தலை ரத்து செய்தார்கள். ஆனால் அதிமுகவின் சூழ்ச்சியை, சதியை மக்கள் முறியடித்துள்ளார்கள். ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் என்ன ஆகும் என்பது தெரியும். மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

எப்படி அதிமுக
அடுத்து என்ன நடக்கும் என்பது திமுகவிற்கு மட்டும்தான் தெரியும். இப்போது நினைத்தாலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியும், அந்த எண்ணம் உள்ளது. காத்துக்கொண்டிருக்கிறோம். மோடி நினைத்தால் ஒரே நாளில் ஆட்சி மாறும்; மாறக்கூடாது என அதிமுகவினர் காலிலேயே விழுந்து கிடக்கின்றனர் .

ஆதரவு இல்லை
நடைபெற்ற இடைத்தேர்தலில் இன்னும் 5 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றிருந்தால் எடப்பாடியின் கதை கந்தல் தான். ஆளும் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்து இருந்தால், ஏன் லோக்சபா தேர்தலில் அவர்களால் வெல்ல முடியவில்லை. ஏன் 22 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் தோல்வி அடைந்தார்கள்.

என்ன வாய்ப்பு
நிச்சயம் இந்த ஆட்சி கவிழப்போகிறதா இல்லையா என பொறுத்திருந்து பாருங்கள். ஏன் தற்போது கர்நாடகாவில் ஆட்சி கவிழ வில்லையா?. அப்படித்தான் விரைவில் தமிழகத்திலும் ஆட்சி கவிழும். இனி தமிழக அரசியலில் நடக்க போகும் விஷயங்களை பொறுத்திருந்து பாருங்கள், என்று ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.

சர்ச்சை
வேலூர் லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் காரணமாக தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இடையே தீவிர வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. திமுகவை முதல்வர் விமர்சிப்பதும், ஆட்சியை கவிழ்க்க போவதாக ஸ்டாலின் சவால் விடுவதும் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications