"மூக்குத்தி" முருகன் மைக்கை பிடித்ததுமே.. டக்கென திரும்பி பார்த்த உதயநிதி.. மேடையில் ஒரே சர்ப்ரைஸ்
மூக்குத்தி முருகன் வரைந்த ஓவியம் கண்டு உதயநிதி ஸ்டாலின் ஆச்சரியப்பட்டு போனார்
வேலூர்: மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி எப்படி வியந்துபோனாரோ, அதுபோலவே, நேற்றைய தினம் உதயநிதி ஸ்டாலினும் ஆச்சரியத்தில் மலைத்து நின்றார்... அப்படி என்ன நடந்தது வேலூரில்?
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவும் வேலூர் மாவட்டச் செயலாளருமான ஏ.பி.நந்தகுமார் தலைமையில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
இந்த விழாவில் திமுக எம்எல்ஏவும், இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இஸ்திரி பெட்டிகள்
கட்சியின் 200 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, 150 ஏழைப்பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், 22 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், 100 சலவைத்தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டிகள் எனப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்... இந்த விழாவில் உதயநிதி பேசும்போது, அணைக்கட்டே இல்லாத ஊருக்கு அணைக்கட்டு என பெயர் உள்ளதாக நந்தகுமார் சட்டமன்றத்தில் பேசுவார்.. ஆனால், இப்போது 50 கோடி ரூபாய் செலவில் அணை கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

பொற்கிழி
இந்த ஆட்சியில் மனு கொடுத்தால் நல்லது நடக்கும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதை தொடர்வோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். தந்தை பெரியாரையும், அண்ணாவையும் நான் நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் இங்கு பொற்கிழி பெற்ற கழக முன்னோடிகளை தந்தை பெரியார், அண்ணா, பேராசிரியர், கலைஞர் ஆகியோரின் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன். அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கி செல்ஃபி எடுக்க வேண்டும் என ஆசை தான். ஆனால் நேரம் போதவில்லை" என்றார்.

செந்தாமரை
இந்த விழா முடிவில், ஒரு பெண் தன்னுடைய குழந்தைக்கு பெயர் வைக்கும்படி உதயநிதியிடம் மேடையில் வந்து கேட்டனர். உடனே உதயநிதி, தன்னுடைய சகோதரி செந்தாமரையின் பெயரை அந்தப் பெண் குழந்தைக்கு சூட்டினார்.... இந்த அணைக்கட்டு நிகழ்ச்சியில், அனைவரையும் கவர்ந்தது, விஜய்டிவி புகழ் மூக்குத்தி முருகன் பாடல்தான்.. மேடையில் உதயநிதி, உட்பட எம்பிக்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் உட்கார்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த மூக்குத்தி முருகன், ஒரு பெரிய ஸ்டூல் போன்ற ஸ்டாண்டை, உதயநிதி முன்பு எடுத்து போட்டு, அதில் வெள்ளைப் பேப்பரை பொருத்தினார்.

மூக்குத்தி முருகன் பாடல்
பிறகு ஒரு கையில் மைக் பிடித்து கொண்டு, மறுகையில் உதயநிதியின் உருவத்தை வரைய ஆரம்பித்தார்.. படிக்காதவன் படத்தில் வரும், "ஒரு கூட்டுக்கிளியாக" பாட்டை பாடியவாரே உதயநிதி ஸ்டாலினின் படத்தை வரைந்தார்.. அந்த பாட்டு முடிவதற்குள் உதயநிதியின் உருவ படத்தை வரைந்துமுடித்துவிட்டார்.. பிறகு, உதயநிதியிடம் அப்போதே, தான் வரைந்த ஓவியத்தை கொண்டு போய் நீட்டினார்.. அதை பார்த்து வியந்துபோன உதயநிதி, "ரொம்ப நல்லாயிருக்கே" என்று மூக்குத்தி முருகனை பாராட்டினார்.

மூக்குத்தி முருகன்
இப்படித்தான் விஜய் டிவியில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், எஸ்பிபி நடுவராக கலந்து கொண்டார்.. அப்போது போட்டியாளராக பங்கு பெற்றிருந்திருந்தார் மூக்குத்தி முருகன்.. மலேசியா வாசுதேவன் குரலை அச்சுபிசகாமல் பாடுபவர் மூக்குத்திமுருகன்.. கண்ணை மூடிக் கேட்டால் மலேசியா பாடுவது போலவே இருக்கும்.. எஸ்பிபி ஒருமுறை நடுவராக வந்திருந்தபோது, இதேபோல, அவரது உருவத்தை பாடிக் கொண்டே வரைந்தார் மூக்குத்தி முருகன்.

எஸ்பிபி
அன்றும், இதுபோலவே, ஒருகூட்டு கிளியாக என்ற பாடலைதான் பாடினார்.. எஸ்பிபியும் - மலேசியா வாசுதேவனும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், அவர்களின் 2 பேரின் உருவப்படத்தையும், அந்த பாட்டு முடிவதற்குள் அவசர அவசரமாக வரைந்து முடித்தார் மூக்குத்தி முருகன்.. பாட்டு பாடிக் கொண்டே ஓவியம் வரைபவரை கண்ணெதிரே பார்த்து திகைத்து விட்டார் எஸ்பிபி.. மூக்குத்தி முருகனை மனமார பாராட்டினார்.. அதுபோலவேதான், நேற்றும் உதயநிதி உட்பட வேலூரே ஆச்சரியப்பட்டு போனது மூக்குத்தி முருகனால்..!
-
சூட்டிங் ஸ்பாட்க்கு வந்த செய்தி.. 48 நாள் ICUவில் போராட்டம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு வந்த சோதனை! -
“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன் -
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா?












Click it and Unblock the Notifications