ED எதுக்கு பாவம் கஷ்டப்பட்டு கதவை தட்டணும்? திறந்தே வச்சிருக்கேன்.. அண்ணாமலைக்கு துரைமுருகன் ரிப்ளை!
வேலூர்: அமலாக்கத்துறை என் வீட்டு கதவை தட்ட வேண்டாம். அவர்களுக்காக கதவை திறந்தே வைத்திருக்கிறேன் என அண்ணாமலை பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி தொடங்கியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த துரைமுருகன், “யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். யார் வேண்டுமானாலும் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம்” என்றும் தெரிவித்தார்.

மேலும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வீட்டு கதவை எப்போது வேண்டுமானாலும் அமலாக்கத்துறை தட்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அண்மையில் கூறியிருந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த துரைமுருகன், “அமலாக்கத்துறை ஒன்றும் எங்கள் வீட்டு கதவை தட்ட வேண்டாம். அந்த கஷ்டம் கூட அவர்களுக்கு வேண்டாம். நாங்கள் கதவை திறந்தே வைத்திருக்கிறோம்” என்று பதிலளித்தார்.
அதைத் தொடர்ந்து, பொருளாதாரத்தில் தமிழ்நாடு மிகவும் பின்தங்கி உள்ளதாக அண்ணாமலை கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அண்ணாமலை என்ன பொருளாதார நிபுணரா எனக் கேள்வி எழுப்பினார். மேலும், பெரிய பொருளாதார நிபுணர்கள் எல்லாம் தமிழ்நாடு முன்னேறி இருப்பதாக சான்றளித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகள் அதிக சீட்கள் கேட்பதாக தகவல் வருகிறதே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு துரைமுருகன், “இந்த மாதிரி வதந்திகளை பற்றி கேட்டு, அதற்கு நான் பதில் சொல்லி, அப்புறம் துரைமுருகன் இப்படிச் சொன்னார் எனப் போட்டு குட்டையைக் குழப்பி விடுவீர்கள்” என சிரித்தபடி கூறினார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications