294 நாட்களுக்கு பிறகு.. முக அழகிரியின் மகன் துரை தயாநிதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
வேலூர்: முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் அண்ணனுமான மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சுமார் 294 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முன்னாள் மத்திய அமைச்சரான மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவர் தொழில் அதிபராகவும், பட தயாரிப்பாளராகவும் உள்ளார். துரை தயாநிதி கடந்த டிசம்பர் மாதம் தனது வீட்டில் இருந்த போது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது வீட்டில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து, உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 மாத காலமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் துரை தயாநிதிக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அவருக்கு தொடர்ந்து பிசியோதரபி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதியை நேரில் சென்று இருமுறை முதல்வர் மு.க ஸ்டாலின் பார்த்து விட்டு நலம் விசாரித்துவிட்டு வந்தார். அதேபோல திமுக எம்பி கனிமொழி உள்பட குடும்பத்தினர் பலரும் அவரை நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
தொடர் சிகிச்சையில் இருந்த துரை தயாநிதி பூரண குணம் அடைந்தார். இதையடுத்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 6 மாத காலமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த துரை தயாநிதி பூரண உடல் நலம் பெற்றது அழகிரியின் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட துரை தயாநிதி, தனது காரில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். மருத்துவமனையில் இருந்து துரை தயாநிதி வெளியேறிய போது அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள், செய்தியாளர்களை படம் பிடிக்க விடாமல் தடுக்க முற்பட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரை தயாநிதி 294 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications