வேலையே செய்யாமல் சொகுசாக பெறுவதுதான் ராஜ்யசபா எம்பி பதவி.. என்ன ஸ்டாலின் இப்படி சொல்லிட்டாரு!
வேலூர்: வேலையே செய்யாமல் சொகுசாக இருப்பதுதான் மாநிலங்களவை எம்பி பதவி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பொன்னப்பந்தாங்கல் பகுதியில் திமுக சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில் அரசியலில் அனாதையாக சுற்றுபவர்கள் கிராம சபை கூட்டம் குறித்து பேசுகிறார்கள். நம்முடன் சில தோழமை கட்சிகள் உள்ளனர். இன்னும் 2 நாட்களில் திமுக கூட்டணி அறிவிக்கப்படும்.

தயார்
பாஜகவுடன் அதிமுக மனதார கூட்டணியில் சேரவில்லை. ஒரு அச்சத்தின் பேரிலேயே சேர்ந்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதவர்கள் தற்போது நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள்.

தயாரா
ஸ்டாலினுக்கு கிராமம் இப்போதுதான் தெரிகிறது எனக் கூறும் முதல்வர் நேருக்கு நேர் விவாதத்திற்கு வர தயாரா? நீங்கள் மேடை போடவில்லை என்றால் நான் மேடை போடுகிறேன். வரத்தயாரா?

அதிமுகவுடன் கூட்டு
வேலையே செய்யாமல் சொகுசாக பெறுவதுதான் மாநிலங்களவை எம்பி பதவி ஆகும். ஆட்சி கவிழ்ந்தாலும் ராஜ்ய சபா பதவிக்கு ஆபத்தில்லை. திராவிட கட்சிகளை அழிப்பதுதான் நோக்கம் எனக் கூறியவர்கள் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளனர்.

கருணாநிதி
அதிமுக திராவிட இயக்கம் இல்லை என்பதை பாமக நிரூபித்துள்ளது. யார் எந்த கூட்டணி அமைத்தாலும் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். கருணாநிதி போல் என்னால் மட்டும் இல்லை. யாராலும் செயல்பட முடியாது.

கூட்டணி
அதிமுக பாமக கூட்டணி ஏற்கெனவே 2009-இல் தோற்கடிக்கப்பட்டதுதான் பாமக. அதிமுகவின் கதை என்ற புத்தகத்தை எழுதியவர்தான் ராமதாஸ். அவர்தான் அதே அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளார் என்று ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திமுக மாநிலங்களவை எம்பியாக கனிமொழி உள்ள நிலையில் வேலையே செய்யாமல் சொகுசாக பெறுவதுதான் மாநிலங்களவை எம்பி பதவி என ஸ்டாலின் குறிப்பிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications