நான் இந்துக்களுக்கு எதிரியல்ல.. மனைவி கோயிலுக்கு செல்வதை நான் தடுத்ததில்லை.. ஸ்டாலின்
சோளிங்கர்: நான் இந்துக்களுக்கு எதிரி என்று தவறாக பிரசாரம் செய்கிறார்கள். அது தவறு என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்துக்குட்பட்ட அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து சோளிங்கரில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என அண்ணா கூறியுள்ளார். நாங்கள் ஆண்டவனுக்கு எதிராக நின்றவர்கள் இல்லை. நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. அவ்வாறு பொய் பிரசாரம் செய்கிறார்கள். இந்து மதம் மட்டுமல்ல. எந்த மதத்திற்கும் நாங்கள் எதிரி அல்ல. என் மனைவி கோயிலுக்கு செல்வதை நான் தடுத்ததில்லை. கோயில்கள் கூடாது என்பது திமுகவின் கொள்கை அல்ல. அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கை.

உதவாதகரம்
தமிழ்நாட்டுக்கு கலைஞர் உதவும் கரமாக இருந்தார்; ஆனால் எடப்பாடி உதவாத கரமாக இருப்பதாக தெரிவித்தார். 18 தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அதிமுக பாமக இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி கொள்கையற்ற கூட்டணி, பேரத்தின் அடிப்படையில் தேர்தல் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

வன்முறை கட்சி
பாமகவினர் பேருந்துகளை கொளுத்துவது, பாலங்களை தகர்ப்பதுதான் அவர்களின் வேலை. பாமக வன்முறை கட்சி என்று சட்டசபையில் ஜெயலலிதா கூறியுள்ளார். பாமகவினரை விமர்சித்து ஜெயலலிதா சட்டசபையில் கூறியுள்ள கருத்துகள் அவைக்குறிப்பில் இருக்கிறது.

வன்னியர் நலன்
வன்னியர்களின் 87 சொத்துக்களை காப்பாற்றியவர் கருணாநிதி. வன்னியர் சமுதாய நலனுக்காக டாக்டர் ராமதாஸ் எதுவும் செய்யவில்லை. பல்வேறு இடங்களில் உள்ள வன்னியர் அறக்கட்டளையின் சொத்துக்களை தமது துணைவியார் பெயரில் பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதி வைத்துள்ளார்.

ரெய்டு
தேர்தல் நேரத்தில் துரைமுருகன் மகன் வீட்டில் சோதனை நடத்துகிறார்கள். திமுக பிரசாரத்தை தடுக்கவே எங்கள் கட்சி நிர்வாகிகள் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறது. மிசா, பொடா சட்டங்களையே பார்த்தவர்கள் நாங்கள். இதற்கெல்லாம் திமுக அஞ்சாது என்றார் ஸ்டாலின்.
-
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications