மோடி வந்த பின் தமிழக அரசியலில் ட்விஸ்ட்! விஜய்யை சிக்க வைக்கப் பார்க்கிறதா பாஜக? தமிழிசை பளீச்!
வேலூர்: வரும் 23ஆம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை அரசியலிலும் ஆட்சியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும், நடிகர் விஜய்யிடம்சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதற்கு பாஜக காரணம், பாஜக பாரபட்சமாக நடந்து கொள்கிறது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என பாஜக மூத்ததலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள யோகா மற்றும் இயற்கை கல்லூரியில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கோபூஜை செய்து,கல்லூரி மாணவிகளுடன் புது பானையில் பொங்கல் வைத்து ,பொங்கல் விழாவை கொண்டாடினார் தமிழிசை.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்," இந்தியா பிரம்மாண்டமான வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதும் நேற்று அமெரிக்க தூதர் நம்ம நாட்டிற்கு வந்தது. நம் நாட்டிற்கு பெருமை. இந்தியா மாதிரி ஒரு நாடு வளர்ச்சி அடைந்த நாட்டைஉலகத்திலேயே பார்க்க முடியாது என்ற ஒரு கருத்தையும் சொல்லி இருக்கிறார்கள்.

தமிழிசை சௌந்தரராஜன்
எனவே இந்தியா மிக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அது மட்டும் அல்ல. எதிரியின் பீரங்கிகளை நேரடியாக தாக்கக் கூடிய கருவிகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு முதல் முறையாக தயாரித்திருக்கிறார்கள். பாரத தேசம் எல்லா விதத்திலும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வதைப் போல தமிழகத்திற்கு நல்ல வழி பிறப்பதற்காக 23ஆம் தேதி கூட்டம் ஒரு அடித்தளமாக அமையும். பிரதமர் வருகை அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதே வேளையில் ஆட்சியிலும்,மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
மோடி தமிழகம் வருகை
டபுள் இன்ஜின் ஆட்சி ஆந்திராவில் இருப்பதால் ஆந்திரா நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக மசூலிப்பட்டினம் துறைமுகத்தை மிக பிரம்மாண்டமாக வடிவமைத்து கொண்டிருக்கிறார்கள். நெல்லூர் ஏர்போர்ட்வடிவமைத்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற திட்டங்களை மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்திட டபுள் இன்ஜின் கவர்மெண்ட் இருக்கும்போது சாத்தியமாக இருக்கிறது. அதே வளர்ச்சி தமிழ்நாட்டுக்கும் வர வேண்டும். தமிழக வளர்ச்சி அடைந்து விட்டது என்று நாம் சொன்னாலும் கூட பல தளங்களில் பின்தங்கி தான் நாம இருக்கிறோம்.
தமிழக அரசு
அதனால் நாம் முன்னேற வேண்டும்என்ற ஒரு ஆவலோடு நாம் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் நாமெல்லாம் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். பெண்களை முன்னேற்றுகிறோம் என்று சொல்லிவிட்டு அங்கன்வாடி ஊழியர்களை தொடர்ந்து போராட வைப்பதும் நல்லதல்ல. அதனால் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.திருப்பரங்குன்றத்தில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா நேற்று இரவு கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்துக்களுக்கு பாரபட்சமாக தமிழக அரசு நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
தவெக விஜய்
நடிகர் விஜய் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருவதை பாஜக தான் காரணம் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை கூறியுள்ளார். பாஜக பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.செல்வப்பெருந்தைக்கு ஏதாவது ஒன்று சொல்ல வேண்டும் என்று பேசி வருகிறார். தனது கட்சிக்குள்ளே அவரோட முக்கியத்துவம் எல்லாம் குறைந்து கொண்டிருக்கிறது. அதனால் அவர் தலைவர் என்பதை சொல்வதற்காக சொல்றார். சிபிஐ விசாரணைக்கு பிஜேபி தான் காரணம் என விஜய்யும் சொல்லவில்லை. அவரது ரசிகர்களும் சொல்லவில்லை. ஆனால் செல்வப் பெருந்தகை மட்டும் இடையில் புகுந்து இதில் குளிர்காய நினைக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications