2 வயது மகனை விஷ ஊசி போட்டு கொன்ற நர்ஸ் சந்தியா.. கள்ளக்காதல் விபரீதம்
2 வயது மகனை விஷ ஊசி போட்டு கொன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

வேலூர்: "மகனை விஷ ஊசி போட்டு கொன்னுட்டு வா.. உன்னை ஏத்துக்கறேன்" என்று கள்ளக்காதலன் சொல்ல, அதன்படியே 2 வயது பெற்ற குழந்தையை கொன்ற தாய் செய்த காரியம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
வேலூர் மாவட்டம் நாற்றாம்பள்ளியை அடுத்த வெள்ளநாயக்கனேரி பகுதியை சேர்ந்தவர் சந்தியா. இவர் 4 வருடங்களுக்கு முன்பு சரவணன் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், இருவரும் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து விட்டனர்.
கடந்த 2 வருஷங்களாகவே சரவணனை பிரிந்து, சந்தியா அம்மா வீட்டில்தான் வசித்து வருகிறார். இப்போது குழந்தைக்கு 2 வயது. அவன் பெயர் விரோஷன்.

பிடிக்கவில்லை
அம்மா வீட்டுக்கு வந்த சந்தியா, திருப்பத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்ஸாக வேலை பார்த்து வருகிறார். அங்கு பிதாமகன் என்பவருடன் கள்ளக்காதல் ஆரம்பமானது. ஆனால் சந்தியாவுக்கு குழந்தை இருப்பது பிதாமகனுக்கு பிடிக்கவில்லை. அதனால் குழந்தையை கொன்றுவிட்டு வந்தால் சந்தியாவை ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னதாக கூறப்படுகிறது.

தலையணை
எங்கே தன்னுடைய கள்ளக்காதலுக்கு பெற்ற மகன் இடைஞ்சலாக இருந்துவிடுவானோ என்று கருதிய நர்ஸ் சந்தியாவும், தன் குழந்தைக்கு கொல்ல முடிவெடுத்தார். அதன்படி, தூங்கி கொண்டிருந்த தன் குழந்தைக்கு தானே விஷ ஊசி போட்டு கொன்றார் சந்தியா. குழந்தை இறந்த பிறகும் தலையணையை அவன் முகத்தில் வைத்து அமுக்கி உள்ளார்.

வாயில் நுரை
சிறிது நேரத்தில் வீட்டில் உள்ள கட்டில் மேல் விரோஷன் வாயில் நுரை தள்ளியவாறு முகத்தின் மீது தலையணை வைக்கப்பட்ட நிலையிலும் இறந்து கிடப்பதை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியில் அலறினார்கள். சந்தியாவும் அவர்களுடன் சேர்ந்து கதறி அழுதாலும், குழந்தை இறந்தது சம்பந்தமாக அவர் மீது அனைவருக்கும் சந்தேகம் எழுந்தது.

மூச்சு திணறி இறந்தான்
இந்த சந்தேகம் ஊர்முழுக்க பரவியதையடுத்து, திம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசாரும் சந்தியாவிடம் விசாரணை நடத்தியபோது, குழந்தை தூங்கி கொண்டிருக்கும்போது முகத்தில் தலையணை விழுந்து மூச்சு திணறி இறந்துவிட்டான்" என்று சொன்னார்.

விஷ ஊசி
அதன்பிறகுதான் போலீசார் சந்தியாவை ஸ்டேஷன் அழைத்து கொண்டு போய் தங்கள் பாணியில் விசாரணையை ஆரம்பிக்கவும் எல்லா உண்மைகளும் வெளியே வந்தன. இப்போது குழந்தையை விஷ ஊசி போட்டு கொன்ற நர்ஸ் சந்தியா கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications