திருப்பத்தூர் அருகே திமுக பிரமுகரை வெட்டி, கல்லைப் போட்டு கொடூரமாக கொன்ற கும்பல்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே முன்விரோத காரணமாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள திமுக பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (44) திமுக பிரமுகரான இவர் அந்த பகுதியில் கட்டப்பஞ்சாயத்து, மதுபாட்டில் விற்பனை போன்ற தொழில் செய்து வந்துள்ளார்.

இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. முன் விரோத காரணமாக இவரை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். அப்போது வீட்டில் இருந்து பார்த்திபன் வெளியே வந்துள்ளார். அவரை பின் தொடர்ந்து மர்ம நபர்கள் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பார்த்திபன் சென்ற போது வழிமறித்த மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டி தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து யாரும் பார்க்கும் முன் தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அறிந்த உறவினர்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டனர். அதை பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஏற்கனவே கோவில் பிரச்சனை காரணமாக அவ்வப்போது அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது அதன் காரணமாக பார்த்திபனை கொலை செய்துள்ளார்களா அல்லது வேறு காரணமா என்று கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு!












Click it and Unblock the Notifications