வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலையில் மல்லிகைப்பூ, ஆரஞ்சு கலர் பட்டுபுடவை.. முகத்தில் பூரிப்பு.. நளினி ஹேப்பி!

சிறையில் இருந்து வெளியே வந்த நளினி மகளுடன் செல்பி எடுத்து கொண்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    வேலூர்: நளினி நேரில் வாதாட சென்னை வருகை... மகளின் திருமணத்திற்கு பரோல் கிடைக்குமா?

    வேலூர்: இதுக்கு முன்னாடி இப்படி ஒரு நளினியை நாம் பார்த்தே இல்லை.. தலையில் மல்லிகைப்பூ, ஆரஞ்சு கலர் பட்டுப்புடவை, வாய் நிறைய புன்னகையுடன் பரோலில் வெளியே வந்தார்!

    அன்று செய்திதாள்களில் இடம் பிடித்து கொண்டிருந்த நளினி, முருகன் விவகாரம் இன்று சோஷியல் மீடியாக்கள் வரை வந்துவிட்டது. 28 ஆண்டுகள் ஜெயில் தண்டனை.. இன்னும் இது முடிவுக்கு வரவில்லை.

    ஆனால் காலம் நளினியை ஒரு மாதத்துக்கு தற்காலிகமாக வெளியே வரவழைத்துள்ளது. இந்த தம்பதிக்கு ஹரித்ரா என்ற மகள் உள்ளார். இவர் பிறந்ததே சிறையில்தான்.

    ஹரித்ரா

    ஹரித்ரா

    தாய் தந்தையர் இருந்தும், பக்கத்தில் இல்லாமலேயே வளர்ந்தவர்.. தாயின் அரவணைப்பு, தந்தையின் ஆதரவு, இருவரின் அன்பு, இப்படி எந்தவித உணர்வுகளையுமே அனுபவிக்காமல், தனிமையில் வளரும் நிலைக்கு ஆளானார் ஹரித்ரா. நல்ல படிப்பு.. லண்டனில்தான் தங்கியிருந்தார்!

    மன்னிப்பு

    மன்னிப்பு

    "என் பெற்றோரை மன்னித்து விடுங்கள்" என்று 2014-ல் ராகுல் காந்திக்கு ஒரு லட்டர் கூட எழுதியிருந்தார் இந்த பெண். இவருடைய திருமண ஏற்பாட்டுக்குதான் பரோலில் தன்னை 6 மாசம் விடுவிக்க வேண்டும் என்று கேட்டார் நளினி.

    கண்ணீர்

    கண்ணீர்

    ஆனாலும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இதை தடுத்தது. ஆனால் நளினியோ "என் மகளுக்கு இதுவரைக்கும் எந்த ஒரு சம்பிரதாய, சடங்குகளையும் நான் செய்ததே இல்லை" ஒரு சராசரி தாயாக கோர்ட்டில் தன் வாதத்தை கண்ணீருடன் நீதிபதியிடம் எடுத்துரைத்து வாதாடினார். இறுதியில் ஒரே ஒரு மாதத்துக்கான பரோல் அளித்தது நீதிமன்றம்.

    புன்னகை

    புன்னகை

    ஒரே ஒரு பெண்ணுக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் புடைசூழ, 30 நாட்கள் பரோலில் நளினி வெளியே வந்தார். எப்போதும் இல்லாத ஒரு மலர்ச்சி.. ஆரஞ்சு கலர் பட்டுப்புடவை, மல்லிப்பூ என நளினியின் முகத்தில் புன்னகை தவழ்ந்தபடியே இருந்தது.

    செல்பி

    செல்பி

    திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை பொதுச்செயலாளர் சிங்கராயர் வீட்டுக்கு சென்றதும், அவரது அம்மா பத்மாவதி ஆரத்தி எடுத்து, மகளை உள்ளே அழைத்து சென்றார். நளினையை நேரில் கண்டதும் உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கரைந்து போவார்

    கரைந்து போவார்

    நளினி தங்கி இருக்கும் நாட்கள் வரை தினந்தோறும் அறிக்கைகள் சிறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும், ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது, எப்போதும் கூடவே இருக்கும் போலீஸ் பாதுகாப்பு.. போன்ற எத்தனையோ கெடுபிடிகளையும் மீறி ஒரு தாயின் சந்தோஷம் நளினியின் முகத்தில் இன்றைக்கு பார்க்க முடிகிறது. வரப்போகிற இந்த 30 நாளும் மகளின் அன்பில் நளினி கரைந்தே போய்விடுவார் என்று மட்டும் தெரிகிறது.

    English summary
    Nalini released in Parole for 30 days from Vellore Jail and met with her daughter
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X