இரண்டாம் கல்யாணத்துக்கு ஆசைப்பட்ட பெண்.. வேலூர் 'காஸ்ட்லி மாப்ளே' பாணியில் நீலகிரியிலும் சம்பவம்
வேலூர்: மேட்ரிமோனியல் மூலம் வரன் தேடும் பெண்களை குறிவைத்து, அதிநவீன AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரங்கேற்றப்படும் நூதன மோசடிகள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன... 2 நாட்களுக்கு முன்புதான் வேலூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. அப்போது நீலகிரி மாவட்டத்திலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்ட பெண்கள், காவல்துறையை நாடி உள்ளனர்.. என்ன நடந்தது?
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த பெண். 30 வயதாகிறது.. இவர் தன்னுடைய 2வது திருமணத்துக்காக பிரபல மேட்ரிமோனி தளம் ஒன்றில் பதிவு செய்திருந்தார்.

காஸ்ட்லி மாப்பிள்ளை
அவரைத் தொடர்பு கொண்ட ஒரு நபர், தனது பெயர் டாக்டர் ஹேமந்த் என்றும், தான் லண்டனில் புகழ்பெற்ற டாக்டராக வேலை பார்த்து வருவதாகவும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார்., பிறகு செல்போன் நம்பரை மாற்றி கொண்டுள்ளனர்.. அந்த பெண்ணின் நம்பிக்கையை பெறுவதற்காக தொடர்ந்து வாட்ஸ்அப் மூலம் பேசி வந்த அந்த நபர், தன்னை ஒரு பெரும் பணக்காரராக காட்டிக்கொண்டார்.
ஒரு கட்டத்தில், தான் அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், அதன் அடையாளமாக லண்டனில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள், தங்கக் கடிகாரங்கள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளைப் பார்சல் மூலம் அனுப்பி வைப்பதாகவும் ஆசை வார்த்தை சொல்லி உள்ளார்..
லண்டன் பணக்கார டாக்டர்
சில நாட்களில் நீலகிரி பெண்ணை, மர்மநபர்கள் சிலர் தொடர்புகொண்டு, டெல்லி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பேசுவாக சொல்லி உள்ளனர்..
"உங்கள் பெயருக்கு லண்டனில் இருந்து ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் அதிக அளவிலான வைரம் மற்றும் வெளிநாட்டுப் பணம் இருப்பதால், அதை விடுவிக்க வரி, அபராதம் செலுத்த வேண்டும்..,, கஸ்டம்ஸ் வரியை கட்ட தவறினால் உங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டல் தொனியில் பேசியிருக்கிறார்கள்..
கஸ்டம்ஸ் வரி
இதைக் கேட்டதும் உண்மை என்று நம்பிய அந்தப் பெண், தன்னுடைய வங்கியில் இருந்த சேமிப்பு மற்றும் நகைகளை விற்று பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.25 லட்சம் வரை அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்... மொத்த பணம் கிடைத்ததும் அந்த லண்டன் மாப்பிள்ளை தலைமறைவாகி விட்டார்.. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அறிந்த அந்த பெண், கோத்தகிரி போலீசுக்கு ஓடினார்.. புகாரும் தந்தார்..
வேலூரிலும் அதே பாணி
இதேபோன்ற ஒரு சம்பவம் சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியிலும் அரங்கேறியுள்ளது. அங்கும் ஒரு பெண் திருமண வரன் தேடியபோது, லண்டன் மாப்பிள்ளை என்ற அதே நாடகத்தை ஆடி மர்ம நபர்கள் ரூ.25 லட்சம் வரை பறித்துள்ளனர். இரண்டு இடங்களிலும் ஒரே மாதிரியான கதையைக் கூறி, ஒரே அளவிலான தொகையை மோசடி செய்திருப்பது இது ஒரு திட்டமிட்ட சர்வதேச கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
AI தொழில்நுட்பத்தின் அபாயம்
இந்த மோசடியில் அந்த நபர் நீலகிரி பெண்ணுடன் பேசும்போது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தன்னுடைய குரலை மாற்றியும், போலியான போட்டோக்கள், வீடியோ காலில் காட்டியும் ஏமாற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது நீலகிரி மற்றும் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். "வெளிநாட்டில் இருந்து யாராவது பரிசு அனுப்புகிறோம் என்று சொன்னாலோ அல்லது சுங்கத்துறை அதிகாரி என்று கூறிப் பணம் கேட்டாலோ பொதுமக்கள் உடனடியாக 1930 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும்" என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications