நாங்க 3 பேரும் அழைத்தோம்.. அப்படியும் அதிமுகவில் இணைய மறுத்துவிட்டார்.. ஓபிஎஸ் போட்ட குண்டு!
டிடிவி தினகரனை நாங்கள் பலமுறை அழைத்தோம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
குடியாத்தம்: நல்லாதான் பேசி பிரச்சாரம் பண்ணிட்டு வந்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்.. திடீரென்றுதான் அந்த குண்டை தூக்கி போட்டார்!
அதிமுக, அமமுக என இரண்டாக உடைந்ததில் இருந்தே இரு கட்சிகளையும் இணைக்க ஒருசிலர் முயற்சி செய்தார்கள். ஆனால் முடியவில்லை.
ஒரு கட்டத்தில் அமமுகவில் உள்ளவர்களுக்கு அதிமுக தரப்பினரே பகிரங்கமாக அழைப்பு விடுத்தனர். அதிலும் முதல்வர் எடப்பாடியில் இருந்து ஜெயக்குமார் வரை ஒருமித்த குரலில் சொன்ன ஒரே வார்த்தை, "அந்த ஒருத்தரை தவிர யார் வேண்டுமானாலும் இணையலாம்" என்பதுதான்!

அமைச்சர் ஜெயக்குமார்
அதிலும் செல்லூர் ராஜு ஒருமுறை சொல்லும்போது "தினகரன் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை" என்றார். அமைச்சர் ஜெயக்குமாரோ, "எழுதி வெச்சுங்குங்க.. தினகரனை அதிமுகவில் சேர்க்கவே மாட்டோம்" என்றார்.

குடியாத்தம் பிரச்சாரம்
இவ்வளவும் பேசியதால் அதிமுகவில் தினகரன் ஒருபோதும் சேர போவது இல்லை என்ற முடிவுக்கு எல்லோருமே வந்துவிட்டார்கள். ஆனால் நேற்று துணை முதல்வர் ஓபிஎஸ் குடியாத்தத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

சுனாமியே வந்தாலும்..
"ஜெயலலிதாவுடன் 35 ஆண்டுகள் இருந்த தினகரன் பதவி வெறி காரணமாக இந்த தேர்தல் நடக்கிறது. அவர்களிடம் சென்றவர்கள் அதிமுகவில் பொறுப்பில் இல்லாதவர்களே. சுனாமியே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.
இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழா.. பங்கேற்க மறவாதீர்கள்

மறுத்துவிட்டார்
சபாநாயகரும் நானும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அழைத்தபோதும் கூட அதிமுகவில் இணைய தினகரன் மறுத்துவிட்டார்" என்றார். இதைக்கேட்டதும் கூட்டத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட ஆரம்பித்து விட்டது. "இந்த சமாச்சாரம் எப்போ நடந்தது.. புதுசு புதுசா சொல்றாரே.." என்று அதிமுகவினர் ஒரு பக்கம் சலசலக்க.. அமமுகவினர் அதற்கு மேல் ஷாக் ஆகி விட்டார்களாம்!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications