Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பத்தூரில் 140 கிராம் தங்க நகைகள் அடமானம்.. கேமராவுக்கு டாட்டா காட்டிய நகைக்கடை உரிமையாளர்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: கர்நாடகாவில் நடந்த ஒரு திருட்டு சம்பவம், திருப்பத்தூர் மாவட்டத்தையே கதிகலங்க வைத்துவிட்டது.. பெங்களூரில் இருந்து தொடங்கிய இந்த நகை மேட்டர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் போலீஸ் ஸ்டேஷன், லாட்ஜ், நகைக்கடைவாசல், செய்தியாளர்களின் கேமரா வரை சென்று பரபரப்பையும் தந்துவிட்டது.. அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள லம்பாடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் அல்தாப் உசைன்.. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் சுமார் 140 கிராம் தங்க நகையை திருடி வந்துவிட்டதாக தெரிகிறது..

Tirupattur Pledged gold jewellery

அடமானம் 140 கிராம் தங்க நகைகள்

திருடிய நகையை, எப்படியாவது பணமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், திருப்பத்தூருக்கு கிளம்பி வந்தார் அல்தாப் உசைன்.. அங்கு தர்மராஜா கோவில் தெருவில் இயங்கி வரும் அருள் என்பவரின் நகைக்கடையில், திருட்டு நகையை அடமானம் வைத்துள்ளார் அல்தாப்.

இதனிடையே, காணாமல் போன நகையின் உரிமையாளர்கள், சுழியா போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் நகையை திருடியவர்கள் யார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, அல்தாப் உசைன் என்பவர் நகையை திருடியது போலீசாருக்கு உறுதியானது.

உடனே அல்தாப் உசைனை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.. அவரிடம் நகை எங்கே? என்று கேட்டதற்கு. திருடப்பட்ட நகைகளை திருப்பத்தூரில் உள்ள ஒரு நகைக் கடையில் அடமானம் வைத்திருப்பதாக சொன்னார்.

நகைக்கடை உரிமையாளர்

இதையடுத்து, கர்நாடக போலீசார், லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்து, அல்தாப் உசைனையும், நகைக் கடை உரிமையாளரையும் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது நகைக்கடை உரிமையாளர் முகத்தை கர்சீப்பால் மூடிக்கொண்டு வந்துள்ளார்.

பிறகு, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அல்தாப்பையும், திருட்டு நகையை அடமானம் வைத்து பணம் தந்த நகைக்கடை ஓனர் அருளையும் விசாரணைக்காக பெங்களூர் அழைத்து செல்ல உள்ளதாக கர்நாடக போலீசார் கூறியுள்ளனர்..

லாட்ஜில் சமரசம்

இதைக்கேட்டதுமே அங்கிருந்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.. திருடனை மட்டும் அழைத்து செல்லாமல், நகைக் கடை உரிமையாளரை ஏன் அழைத்து செல்ல வேண்டும்? என்று கேட்டு, நகைக்கடைக்காரர் அருளுக்கு ஆதரவாக, சில வழக்கறிஞர்கள் அங்கு திரண்டுள்ளனர்.. கர்நாடக போலீசாரிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையையும் வழக்கறிஞர்கள் நடத்தி உள்ளனர்..

பிறகு,அருகிலுள்ள தனியார் லாட்ஜூக்கும் கர்நாடக போலீசாரை அழைத்து சென்று சமரச பேச்சில் ஈடுபட்டார்களாம்.. இதற்கு பிறகுதான், கடை உரிமையாளரை விடுவித்துவிட்டு, அல்தாப் உசைனை மட்டும் தங்களுடன் கர்நாடக போலீசார் அழைத்துச் சென்றார்களாம்.

மேற்கண்ட இந்த பரபரப்பு மீடியாவுக்கு தெரிந்து, என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள செய்தியாளர்கள் நகைக் கடை உரிமையாளர் அருளிடம் கேட்க முயன்றனர்..

கொலையா செஞ்சுட்டேன்

அதற்கு நகைக்கடை ஓனர், நான் என்ன கொலையா செஞ்சுட்டேன்? இப்படி வீடியோ எடுக்குறீங்க! என்று கடுப்பாக கேட்டதுடன், செய்தியாளர்களின் செல்போன் முன்பு டாட்டா காண்பித்தும் போஸ் கொடுத்துள்ளார்.. பிறகு கடையை மூடிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டாராம்.

திருப்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கர்நாடக போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தபோது, முகத்தை கர்சீப்பால் மூடிக்கொண்டு வந்த நகைக்கடை ஓனர் அருள், இப்போது கேமராவுக்கு டாட்டா காட்டிவிட்டு போகிறாராம்.. அப்படியானால் ஏதோ சம்திங் லாட்ஜில் சமரசத்தின்போது நடந்திருக்குமோ?? என்று திருப்பத்தூரில் சலசலத்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+