எப்படி அசிங்கப்படுத்தினார் இந்த துரைமுருகன்.. தெய்வம் இருக்குங்க.. பிரேமலதா டென்ஷன் பேச்சு
ஆரணி கூட்டத்தில் பிரேமலதா துரைமுருகனை சரமாரியாக விமர்சித்தார்.
வேலூர்: துரைமுருகன் என்னவோ யோக்கியர், உத்தமர் போல பேசிட்டு இருந்தார்.. இப்போ என்ன ஆச்சு? மூட்டை மூட்டையாக.. கோடி கோடியாக.. கொள்ளையடித்து சம்பாதித்த பணம் மொத்தமாக பாதாளத்தில் இருந்து இன்னும் தோண்டி எடுத்துக்கொண்டே இருக்கிறார்களாம்" என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
கடந்த 2 தினங்களாக திமுக தரப்பை உலுக்கி வருவது துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றதுதான்.

துரைமுருகன் வீடு தவிர, அவரது மகனுக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் திமுக நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. அத்துடன் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடந்ததற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஆரணியில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், "15 நாளுக்கு முன்னாடி இதே துரைமுருகன் தேமுதிகவை எவ்வளவு அசிங்கப்படுத்தினார்? அது இந்த உலகத்திற்கே தெரியும். ஆனால், இன்றைக்கு என்ன ஆச்சு.. தெய்வம்னு ஒன்னு இருக்கு.
மூட்டை மூட்டையா... கோடி கோடியா.. கொள்ளையடிச்சு சம்பாதித்த பணம், அத்தனையையும் பாதாளத்தில் இருந்து தோண்டி எடுத்துக்கொண்டே இருக்கிறார்களாம். எல்லாமே 500 கோடி, 1,000 கோடி ரூபாய் என்று சொல்கிறார்கள்.
அன்று கொள்ளையடித்தது இன்று மொத்தமாக வெளியே வந்துகொண்டிருக்கிறது. துரைமுருகன் 'யோக்கியர்', உத்தமர் போல பேசிட்டு இருந்தாரே... இப்போ என்ன ஆச்சு?" என்று கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications