வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கல்லறையில்.. 2 மணி நேரம் கிடந்த நர்ஸ் அர்ச்சனாவின் சடலம்.. போராடி நல்லடக்கம்.. ராணிப்பேட்டை பரபரப்பு

நர்ஸ் அர்ச்சனா உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

Google Oneindia Tamil News

ராணிப்பேட்டை: தொற்றால் உயிரிழந்த நர்ஸ் அர்ச்சனாவின் சடலத்தை அடக்கம் செய்ய நவல்பூர் கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்ததால்.. இதனால் 2 மணி நேரத்துக்கும் மேலாக கல்லறையில் நர்ஸ் சடலத்துடன் உறவினர்கள் தவித்து வந்த நிலையில், இறுதியில் அவரது சடலம் அதே கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை நவல்பூரை சேர்ந்தவர் அர்ச்சனா.. இவர் ஆற்காடு அரசு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வந்தவர். இந்நிலையில் அர்ச்சனாவுக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.

 ranipet nurse archana died dut to covid19

அதனால் அவருக்கு கொரோனா டெஸ்ட் செய்து பார்த்ததில், தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அர்ச்சனா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதையடுத்து அவரது சொந்த ஊரான நவல்பூரில் உள்ள கல்லறை தோட்டத்தில் அர்ச்சனாவை புதைக்க அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர்.

ஆண் குழந்தை பொறக்கலையாம்.. ஆத்திரத்தில் பெண் சிசுவின் வாயினுள் விரலை விட்டே கொன்ற கொடூர தந்தைஆண் குழந்தை பொறக்கலையாம்.. ஆத்திரத்தில் பெண் சிசுவின் வாயினுள் விரலை விட்டே கொன்ற கொடூர தந்தை

அதற்காக சடலத்தையும் கல்லறை தோட்ட பகுதிக்கு கொண்டு வந்தனர்.. ஆனால் கொரோனா தொற்றால் உயிரிழந்த நர்ஸ் உடலை புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்ய ஆரம்பித்தனர். இந்த தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

 ranipet nurse archana died dut to covid19

இதனால் கிட்டத்தட்ட 2 மணி நேரமாக நர்ஸ் சடலத்தை வைத்து கொண்டு உறவினர்கள் தவித்த கொடுமை நடந்தது.. இறுதியில், கிராம மக்களை போலீசார் சமாதானம் செய்தனர்.. இதன்பிறகே அர்ச்சனா சடலம் அதே கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஏற்பட்டஏற்கனவே இப்படித்தான் சைமன் டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பிறகு, கோர்ட் வரை இந்த விஷயம் சென்றது,. "இறந்த நபர்களின் சடலத்தில் இருந்து, எந்தவொரு நோய் பரவல் குறித்தும், மக்கள் கவலைப்படவோ, பயப்படவோ தேவையில்லை. நாங்கள், அதை பாதுகாப்பான முறையில் கையாள்கிறோம்.

இந்த விஷயத்தில், நம் சமூகத்திற்கான, முழு பாதுகாப்பை, உங்களுக்கு உறுதி அளிக்கிறோம். நம் உலகத்தில் இருந்து செல்பவர்களை, மதிப்புடனும், மரியாதையுடனும் அனுப்பி வைப்போம்" என்று அரசு சார்பில் பல நம்பிக்கைகள் தரப்பட்டது. ஆனாலும், மக்களுக்கு தொற்று அச்சம் போகவே இல்லை.. இதனால் மனித நேயமும் மங்கி கொண்டு வருவது கவலையை அளிப்பதாக உள்ளது.. இன்னும் இது சம்பந்தமான விழிப்புணர்வும் உடனடி தேவையாக இருக்கிறது!

English summary
ranipet nurse archana died dut to covid19
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X