இன்னொருத்தனுக்கு பிறந்த குழந்தையை.. அதான் அண்டாவில் அமுக்கி விட்டோம்.. கல் மனசு கள்ளக்காதலன்!
4 வயது சிறுவனை கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்
Recommended Video
வேலூர்: "இன்னொருத்தனுக்கு பிறந்த குழந்தையை என்னால வளர்க்க முடியாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டேன். அதுக்கப்பறம்தான், ரெண்டு பேரும் சேர்ந்து தருணை அண்டாவில் அமுக்கி கொன்றோம்" என்று 4 வயது குழந்தையை கொன்ற கள்ளக்காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ராணிப்பேட்டை சிப்காட்டை சேர்ந்த தம்பதி ராமச்சந்திரன் - காவ்யா. ராமச்சந்திரன் ஒரு கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 4 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது, 4 வயதில் தருண் என்ற குழந்தையும் இருந்தான். இப்போது காவ்யாவின் வயசு 25!
கணவனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக கணவரை பிரிந்த காவ்யா குழந்தையுடன் அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார். இந்நிலையில், தியாகராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, 2 வருஷத்தில் அது தீவிரமான காதலாக உருவாகி, போன ஜனவரி மாதம் கோயிலில் வைத்து கல்யாணம் செய்துகொண்டனர். அதுமுதல் தியாகராஜனும் காவ்யாவும் குழந்தையை வைத்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

சில்வர் அண்டா
ஆனால் இவர்களின் சந்தோஷத்துக்கு இடையூறாக குழந்தை இருப்பதாக உணர்ந்த இருவரும் கடந்த 13-ந்தேதி குழந்தையை தூக்கிக் கொண்டு போய் சில்வர் அண்டாவில் மூழ்கடித்தனர். பின்னர், இறந்த குழந்தையை தூக்கி அரிசி மூட்டையில் கட்டி, பைக்கில் எடுத்து சென்று பாலாறுக்கு பக்கம் ஒரு குழியைதோண்டி புதைத்தனர்.

வாக்குமூலம்
இது சம்பந்தமாக விஷயம் வெளியே தெரிந்து காவ்யாவை போலீசார் கைது செய்ததுடன், தலைமறைவாகி விட்ட தியாகராஜனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தியாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். தனது வாக்குமூலமாக தியாகராஜன் சொன்னதாவது:

மகனை தந்துடு
"எனக்கும் காவ்யாவுக்கும் போன வருஷம் கல்யாணம் நடந்தது. இது கேள்விப்பட்டு முதல் கணவர் வந்து, "உன் வாழ்க்கையில நான் குறுக்கே வரல. ஆனாஎன் குழந்தையை மட்டும் என்கிட்ட தந்துடு" என்று கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் காவ்யாவோ மகனை தரவேயில்லை. இதனால் எங்களுக்கள் அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

கொலை செய்தோம்
இன்னொருத்தனுக்கு பிறந்த குழந்தையை என்னால வளர்க்க முடியாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டேன். அதுக்கப்பறம்தான், குழந்தையால நமக்கு சண்டை வேணாம், கொன்று விடுவோம்னு ரெண்டு பேரும் முடிவு செய்தோம். அண்டாவில் அமுக்கி கொலைசெய்து, பாலாற்று பக்கத்தில் குழிதோண்டி புதைத்துவிட்டோம்" என்றார். தொடர்ந்து தியாகராஜனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications