திமுகவுக்கு தலைவர் கருணாநிதி வீட்டிலிருந்துதான் வர முடியுமாம்.. என்னை கேள்வி கேக்கறீங்க..சீமான் நச்
கொட்டும் மழையில் சீமான் வேலூரில் பிரச்சாரம் செய்தார்
வேலூர்: "இத்தனை கோடி மக்கள் இருக்கிற இந்த திமுகவுக்கு தலைவர் கருணாநிதி வீட்டுல இருந்துதான் வர்றாங்க" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடி உள்ளார்.
வேலூர் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியபோது:

"திமுகன்னு ஒரு கட்சி இருக்கு பாருங்க.. திருடர்கள் முன்னேற்றக் கழகம்னு... ஐயோ ஒரு பாட்டை நாலஞ்சி பசங்க சேர்ந்து போட்டு விட்டுருக்காங்க. தண்ணியில லாரியை விடுவான் நம்ம ஆளு யாரு நம்ம ஐயாவைதான்.. ஐயா தளபதியைதான்.. இளைய தளபதியை வேற உருவாக்கி இருக்காங்க.
தமிழ்நாட்டை தமிழரே ஆளனும்னு சொன்னால், "என்னது.. தமிழ்நாட்டை தமிழனே ஆளனுமா? அது எப்படின்னு என்கிட்ட கேள்வி கேட்கறாங்க. உன் கட்சிக்கு தலைவனை உன் வீட்டை விட்டு வெளியே இருந்து ஒருத்தனை கொண்டு வர முடியலை.
இத்தனை கோடி மக்கள் இருக்கிற இந்த திமுகவுக்கு தலைவர் கருணாநிதி வீட்டுல இருந்துதான் வர்றாங்க. அப்போ ஒரு கட்சிக்கு தலைவனே ஒரு வீட்டுக்குள்ள இருந்துதான் வரணும், நாட்டுக்குள்ள இருந்து வரமுடியாதுன்னு சொல்லுற நீ, என் நாட்டை நான்தான் ஆளனும் என்பதை எப்படி கேள்வி கேக்கிறே? எப்படி கேட்க முடியும்?" என்றார்.
இதையடுத்து ஆம்பூரில் சீமான் பேசும்போது பசுமை வழிச்சாலை திட்டத்தை விளாசினார். அப்போது "வளர்ச்சி பற்றி நீ பேசாதே உனக்கு அருகதை கிடையாது. பொன் விளையும் என் விளைநிலங்களை பறித்து கொண்டு, என் மரங்களை அழித்து, என் மனைகளை தகர்த்துவிட்டு போடும் சாலைக்கு பெயர் பசுமை சாலை... தூ... கேவலமா இல்லை? பேரை பாரு.. பசுமை வழி சாலை? இதுக்கு இழப்பீடு வேறு. இதுக்கு வார்த்தையே இழப்பீடு என்கிறார்கள்.
இழப்பீடுதான், உரிய தொகை இல்லை. ஏன் எட்டு வழிச்சாலைன்னு கேட்டால், அதுக்கு சொல்றாங்க, கார் தேய்மானம் குறைஞ்சிடும். இது ஒரு சேவையா? அப்பறம் பெட்ரோல் டீசல் மிச்சமாயிடுமாம். குடிக்க தண்ணி இல்லை, அங்கே எங்க ஆத்தாளும், அக்காளும் தெருவுல தண்ணிக்கு குடம் வெச்சிட்டு நின்னுட்டு இருக்காங்க. பெட்ரோல், டீசல் மிச்சமா?
அப்பறம், இந்த சாலை வழியா சென்னைக்கு சீக்கரமா போயிடலாமாம். சீக்கிரமா போயி இந்த வெண்ணைங்க அங்க என்ன பண்ண போகுது? சீக்கிரம் சென்னைக்கு போய் சீரியல் பார்ப்பே.. வேற என்ன புடுங்க போற நீ? 8 வழிச்சாலை எதுக்கு? இதை கேட்டால் வளர்ச்சிக்கு எதிராக இருப்பேன்னு சொல்றாங்க. என்னதான்டா உங்க வளர்ச்சி?" என்றார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications