ஏலகிரியில் 9,000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள்.. இந்திய வரலாற்றில் திருப்பம்!
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலையில், 9,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்த குகை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த குகையில் உள்ள ஓவியங்கள் இன்னும் அழியாமல் இருப்பதால், உடனடியாக இதை பாதுகாக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தியாகராஜர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியரும், வரலாற்று அறிஞருமான டாக்டர் பிரபு தலைமையிலான குழு, ரெட்டியூர் அருகே உள்ள குன்றுகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது. இந்த ஆய்வின்போது, ஓவியங்கள் வரையப்பட்ட குகை குறித்து உள்ளூர் மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

குகை ஓவியங்கள்
இதனையடுத்து குகையை ஆய்வு செய்த குழுவினர், அதில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் சுமார் 9,000 ஆண்டுகள் பழமையானவை என்பதை கண்டுபிடித்துள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த குகை 100 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. இந்த இடத்தில் 50 பேர் வரை தாராளமாக தங்க முடியும். ஆனால் வெறுமென தங்குவதற்காக மட்டுமே இந்த இடத்தை பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இல்லை.
80 ஓவியங்கள்
மாறாக சடங்குகள் செய்யவும் இந்த இடம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். வடமேற்கு தமிழ்நாட்டின் பரந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான பாறை ஓவியமாக இது கருதப்படுகிறது. போர் செய்வது, நடனமாடுவது, வேட்டையாடுவது, விலங்குகள் மீது சவாரி செய்வது என சுமார் 80 ஓவியங்கள் இந்த குகைகளில் இருக்கின்றன.
கற்கால மனிதர்கள்
இது குறித்து டாக்டர் பிரபு கூறுகையில், "இந்த ஓவியங்கள் புதிய கற்கால ஓவியங்களை ஒத்திருக்கின்றன. இவை கிமு 10,000 மற்றும் 3,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். இரும்பு காலத்தை சேர்ந்த மனிதர்கள்தான் இங்கு வசித்திருக்கின்றனர். இந்த இடத்தை ஆய்வு செய்வது இரும்பு காலத்தை சேர்ந்த மனித சமூகத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவும், அவர்களின் கலாச்சார, பண்பாட்டு அம்சங்களை புரிந்துக்கொள்ளவும் பயன்படுகிறது.
பாதுகாக்க வேண்டும்
இந்த கண்டுபிடிப்பு தென்னிந்தியாவின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரங்களை பற்றி அரிய கண்ணோட்டத்தை வழங்குகிறது. இப்பகுதியின் தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் இது பெரிய மைல்கல். ஆனால் இதை முழுமையாக பாதுகாக்க வேண்டும். சில ஓவியங்கள் குகையை சுற்றிப்பார்க்க வருபவர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இந்திய வரலாறு
இந்தியாவின் வரலாறு ஒரு காலத்தில் வட இந்தியாவிலிருந்து எழுதப்பட்ட நிலையில், தற்போது தென்னிந்தியாவிலிருந்து எழுத வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மனித நாகரிகம் செழிந்து வளர்ந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
தேசிய அளவில்
இந்தியாவில் ஒரு சில இடங்களில்தான் 9000 ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. மத்திய பிரதேசத்தின் பீம்பேட்கா பகுதியில் உள்ள குகை ஓவியங்கள் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறியப்படுகிறது. அதேபோல மகாராஷ்டிராவின் அம்பாதேவி ஓவியங்களும் பழமையானவையாக அறியப்படுகின்றன.
தமிழ்நாட்டில் ஓவியங்கள்
தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் கீழ்வாலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்கள் 7,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள ஓவியங்களில், குதிரை மேல் மனிதன் ஒருவன் அமர்ந்திருக்கும் காட்சி, சிறப்பாக வரையப்பட்டிருக்கிறது. அதேபோல தர்மபுரி-ஈரோடு மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கரிக்கையூர் பாறை ஓவியங்கள் நடு கற்காலத்தை சேர்ந்ததாக இருக்கிறது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரியில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்கள் கற்காலத்தை சேர்ந்ததாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குகை ஓவியங்களில் ஏலகிரி ஓவியங்கள்தான் மிகவும் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications