ஏய்.. இன்னா.. சுடட்டா.. ஐயா நான் ரவுடி இல்லைங்க.. அது பொம்மை துப்பாக்கிங்கய்யா.. பல்டி அடித்த கபாலி

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வைரல் வீடியோ.. மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

    வேலூர்: "ஏய்.. எங்க பார்த்தாலும் உன்னை சுட்டு தள்ளிடுவேன்.. துப்பாக்கிதான் இனி பேசும்.. செத்துடுவே" என்று துப்பாக்கியை வைத்து மனைவியிடம் வீடியோ கால் பேசி மிரட்டிய கபாலியை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, "நான் ரவுடி இல்லைங்க.. இது வெறும் பொம்மை துப்பாக்கிதான்.." என்று போலீஸ் கஸ்டடியில் உள்ள கபாலி மன்னிப்பு கேட்டு இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றில் சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வைரலானது. அதில் ஒருவர் கையில் துப்பாக்கி வைத்து கொண்டு, அசிங்க அசிங்கமாக பேசுகிறார்.

    அதில், "ஏய்.. எங்க பார்த்தாலும் உன்னை சுட்டு தள்ளிடுவேன்.. மாட்டினே.. அவ்வளவுதான் நீ... துப்பாக்கிதான் பேசும் இனி எங்கிருந்தாலும்.. இது பொம்மை துப்பாக்கி இல்லை.. செத்துடுவே.." என்றார். உடனே இன்னொரு வீடியோவில் ஒரு பெண் கண்ணீர் விட்டு கதறியபடி பேசுகிறார்.

    பிராப்ளம்

    பிராப்ளம்

    அதில் அவர், "வணக்கம் என் பெயர் மலர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு. இப்போ நான் சிங்கப்பூரில் வேலை பார்த்துட்டு வர்றேன். எனக்கு ஒரு பிராப்ளம். என்னால தனியா அதை தீர்க்க முடியல. அதனால்தான் இணையத்தில் பதிவிடுகிறேன். எனக்கு கல்யாணமாகி ஒரு மகள் இருக்கிறாள். காலேஜ் படிக்கிறாள்.

    2-வது கல்யாணம்

    2-வது கல்யாணம்

    மகள் குழந்தையாக இருக்கும்போதே என்னுடைய முதல் கணவர் இறந்துவிட்டார். 6 வருஷத்துக்கு முன்பு காட்பாடியை சேர்ந்த கபாலீஸ்வரன் என்பவரை 2-வது கல்யாணம் செய்துகிட்டேன். மகளுக்கும், எனக்கும் எதுவும் செய்யாததால் மலேசியா சென்றேன். திரும்ப வேலூருக்கு சென்று, மகளை அங்குள்ள காலேஜில் சேர்த்தேன்.

    காலேஜ் படிப்பு

    காலேஜ் படிப்பு

    2 வருஷங்கள் அவரோடு இருந்த காலம் நரகம் போல இருந்தது. அதிகமாக தப்பு செஞ்சார். பிஎஸ்என்எல்லில் வேலை செய்துகொண்டிருந்தார். அதிமுகவில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் என்று அவர் சொன்னார். கட்சி பெயர் சொல்லி மினிஸ்டர், எம்எல்ஏக்களுடன் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவார். பிஎஸ்என்எல்லில் 40 பேரிடம் சுமார் 2 கோடி வரை வாங்கியுள்ளார். பெண்களை வைத்து தொழில் செய்வார். அதனால் மகளின் காலேஜ் படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டு சிங்கப்பூரில் வேலைக்கு சேர்ந்தேன்.

    பாலியல் தொந்தரவு

    பாலியல் தொந்தரவு

    இப்போ தினமும் வீடியோ கால் பண்ணி ஆபாச வார்த்தைகளில் பேசி பாலியல் தொந்தரவு செய்கிறார். என் பேஸ்புக் ஐடியை பயன்படுத்தி என் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு நாளைக்கு 5,000 என்று கூறி, எனது செல்போன் எண், மகள் எண்ணை போட்டுள்ளார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நேற்றுகூட போன் பண்ணி உன் பொண்ணு போட்டோவையும் பேஸ்புக்கில் போடுவேன்னு சொல்லி மிரட்டுறார். பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க" என்கிறார்.

    வீடியோ

    வீடியோ

    இந்த வீடியோ வேலூர் மாவட்டத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி பிரவேஷ்குமார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, வீடியோவில் துப்பாக்கி காட்டி மிரட்டிய கபாலியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 செல்போன்கள், 2 கத்தி, ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை நடந்துவருகிறது. இதையடுத்து போலீசாரின் கஸ்டடியில் உள்ள கைதான கபாலி திரும்பவும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    தண்டனை

    தண்டனை

    அதில், "என் மனைவி மலரை குடும்ப சூழ்நிலை காரணமாக பிரிந்து வாழ்கிறேன். அவர் வேலூருக்கு வரணும். அதுக்காகத்தான் மிரட்டினேன். அதுவும் அது பொம்மை துப்பாக்கிதான். பொதுமக்களுக்கு சிரமத்தை தந்துட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. நான் ரவுடி இல்லை. எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவனும் இல்லை. ஆனா வீடியோவை பார்த்துட்டு போலீஸ் என்னை கைது பண்ணி தண்டனை கொடுத்துள்ளனர்" என்கிறார் கபாலி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+