மனநலம் பாதிக்கப்பட்டாரா.. பாதிக்க வைத்தார்களா.. முகிலன் சொல்லும் அதிர்ச்சி பதில்
Recommended Video
வேலூர்: சமுக செயற்பாட்டாளரான போராளி முகிலன் தான் மனநிலை பாதிக்கப்படவில்லை என்றும் தன்னை மனநலம் பாதிக்க வைத்துவிட்டார்கள் என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அவரை அப்படி செய்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கூடங்குளம் அணு உலை, தூத்துக்குடி ஸடைர்லைட் ஆலை, எட்டு வழிச்சாலை,ஹைட்ரோ கார்பன் மற்றும் மீதேன் திட்டங்களுககு எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்தவர் சமூக போராளி முகிலன் (52)/ தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் அதை வெளியிடப்போவதாகவும் முகிலன் கடந்த பிப்ரவரி 15ம் தேதி கூறியிருந்தார்.

ஆட்கொணர்வு மனு
அதபின்னர் மதுரை செல்வதற்காக சென்னை எழும்புர் ரயில் நிலையத்திற்கு வந்தார் அதன் பின்னர் முகிலனை பற்றி எந்த தகவலும் . அவர் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. அவர் மதுரைக்கும் செல்லவில்லை. அவரை கண்டுபிடித்து தரக்கோரி ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹென்றி திபேன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

பொதுமக்கள் போராட்டம்
அத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள்ளும் முகிலனை கண்டுபிடித்து தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விசாரணையை விரிவு படுத்தும் வகையில் சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்ட்டதுகடந்த 5 மாதங்களாக சிபிசிஐடி போலீசார் அவரை தேடிவந்தனர். முகிலனை யாராவது கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது.

திருப்பதியில் முகிலன்
இந்நிலையில 5 மாதங்களுக்கு பிறகு மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பதி வந்த முகிலனை மனநலம் பாதிக்கப்பபட்டவரா கருதி அம்மாநில ரயில்வே போலீஸ் மீட்டுள்ளது.அப்போது அவர் கூடங்குளம்அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக எதிராக கோஷங்கள் எழுப்பினார். மேலும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார். இந்த வீடியோ நேற்று வைரலானது.

முகிலனுக்கு உடல் பரிசோதனை
அதைத்தொடர்ந்து தமிழக சிபிசிஐடி போலீசின் கோரிக்கையை ஏற்று முகிலனை ஆந்திர போலீசார் தமிழகத்திற்கு அனுப்பிவைத்தனர். ரயிலில் பலத்த பாதுகாப்புடன் காட்பாடி அழைத்துவரப்பட்ட முகிலன், உடல் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை சுமார் 2 மணிநேரம் மருத்துவர்கள் பரிசோதித்தனர், பின்னர் சிபிசிஐடி டிஎஸ்பி வஜ்ரவேல் தலைமையிலான போலீசார் முகிலனை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்னை புறப்பட்டனர் .

முகிலன் விளக்கம்
அப்போது செய்தியாளர்கள் முகிலனை நெருங்கிச்சென்று, நீங்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளீர் என மருத்துவர்கள் கூறுகிறார்களாமே என கேள்வி கேட்டனர். அதற்கு முகிலன், நான் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்ல, அவர்கள் என்னை மனநிலை பாதிக்கபட வைத்துவிட்டார்கள் என்று அழுகுரலோடு கூறிக்கொண்டிருந்தார். ஆனால் போலீசார் அவரை அதற்கு மேல் பேசவிடாமல் வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றி சென்னைக்கு அழைத்து சென்றனர். சென்னையில் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்ட முகிலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விடை தேட வேண்டும்
முகிலன் 5 மாதங்களாக எங்கு மாயமானார். அவர் கடத்தப்பட்டாரா, அப்படி ஆம் என்றால் யார் கடத்தினார்கள், முகிலன் 5 மாதங்களாக எங்கு இருந்தார். மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் காணப்படும் அளவுக்கு மாறக் காரணம் உள்பட பல கேள்விகளுக்கு சிபிசிஐடி விடை தேடவேண்டியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications