விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை.. மதமாற்றம் செய்யவே கட்சி ஆரம்பித்துள்ளார்.. அர்ஜூன் சம்பத் அட்டாக்
வேலூர்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை என்றும், மதமாற்றம் செய்யவே கட்சி ஆரம்பித்துள்ளார் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
வேலூருக்கு வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் செங்கோல் வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ஜூன் சம்பத் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு முன்பு ஆதரவாக வாக்களித்துவிட்டு தற்போது வரலாற்று பிழை என்று எதிர்த்து பேசுகிறார். தஞ்சை பெரிய கோவிலில் நாட்டியாஞ்சலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்து விரோத அரசாக செயல்படுகிறது. பிரதமர் மோடி ஆதரவு அலை தமிழகத்தில் வீசுகிறது. இந்த அலை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.
தமிழக முதல்வர் குடியுரிமை திருத்த சட்டம் பிரிவினையை உருவாக்கும் எனக் கூறுகிறார். இந்த சட்டத்தால் ஒருவருக்கும் பாதிப்பு கிடையாது. புதியதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய், CAA விவகாரத்தில் அடிப்படை அரசியல் அறிவு இல்லாமல் பேசுகிறார். விஜயின் அறிக்கைக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நிறுவனங்கள் விஜய்க்கு பின்னால் இருந்து கொண்டு இயக்குகின்றன.
மதமாற்றம் செய்யவே விஜய் கட்சி தொடங்கியுள்ளார். இலங்கை தமிழர்களுக்கு இங்கு இரட்டை குடியுரிமை கொடுக்க தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில், தமிழகத்தில் ஒரு இஸ்லாமியராவது பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசளிக்க தயாராக உள்ளோம்.
நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேரந்த திமுக கூட்டணி எம்பிக்கள் அனைவரும் கடந்த 5 ஆண்டுகளும் பிரதமர் மோடியை எதிர்த்து பேசுவதை மட்டுமே வழக்கமாக கொண்டிருந்தனர். தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஏதும் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சிஏஏ சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்றும் பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், சிஏஏ சட்டம் அமலுக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறுகையில், "சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்" என்று கூறியிருதார். இந்த நிலையில், தான் விஜயின் கருத்துக்கு அர்ஜூன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக்












Click it and Unblock the Notifications