பாரதிதாசனின் கருத்து ஆசான் பெரியார்... இந்தி தேசிய மொழியா? - நடிகர் அஜய் தேவ்கனுக்கு வைரமுத்து பதிலடி
வேலூர்: இந்தியை இந்தியாவின் தேசிய மொழி என்றோ, பொது மொழி என்றோ பொதுவெளியில் இனி யாரும் கருத்தை முன் வைக்கக்கூடாது என்று விரும்புவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
பாவேந்தர் பாரதிதாசனின் 132 வது பிறந்தநாள் பெருவிழா வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழியக்க பொதுச் செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் பதுமனார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழுக்காக உயர் தியாகம் செய்தவர்களுக்கு வணக்கம்
இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்தியை எதிர்ப்பதற்காகவும் தமிழ் மொழியை காப்பதற்காகவும் பலர் தங்கள் உயிரை தியாகம் செய்து இருக்கின்றனர். அவர்களை நாம் வணங்குகிறோம். ஆனால், இவ்வளவு போராட்டங்களை நடத்தியும் நாம் மீண்டு உள்ளோமா என்பது கேள்விக்குறிதான்.

இந்தி தேசிய மொழி என்று சொல்லக்கூடாது
வடநாட்டு கலைஞர்கள் சிலர் இந்தியை இந்தியாவின் தேசிய மொழி என்று சொல்கிறார்கள். இந்தியை இந்தியாவின் தேசிய மொழி என்றொ அல்லது இந்தியாவின் பொது மொழி என்றோ பொதுவெளியில் யாரும் சொல்லக்கூடாது என்று நான் விரும்புகிறேன். பன்முகத்தன்மை கொண்ட பல கலாச்சாரங்களால் சேர்த்து தைக்கப்பட்ட தேசம் இது.

தமிழில் பெயர் வையுங்கள்
தமிழ் மக்கள் தங்களின் குழந்தைகளுக்கு தமிழில் பெயர்களை வைக்காமல் வட மொழியில் பெயர் வைக்கின்றனர். பெயர் என்பதுதான் நமது அடையாளமும் கலாச்சாரமும் ஆகும். பெயர் என்பதுதான் வரலாற்று தொடர்ச்சி. தமிழில் குழந்தைகளுக்கு பெயரை சூட்டுங்கள். அதுதான் பாவேந்தருக்கு நாம் செய்திடும் பெருமை." என்றார்.

பாரதிதாசனின் கருத்து ஆசான் பெரியார்
இந்த நிகழ்வு குறித்து ட்விட்டரில் புகைப்படத்துடன் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், "இன்று வேலூரில் பாவேந்தர் பாரதிதாசன் 132ஆம் பிறந்தநாள் பெருவிழா. வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் சிறப்புரை செய்தேன். 'பாவேந்தருக்கு இரண்டு ஆசான்கள்; கவிதைக்கு எட்டயபுரம்; கருத்துக்கு ஈரோடு' என்றேன். அதிர்ந்தது அரங்கம்! கரவொலியால்." எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications