வாணியம்பாடியில் 300 ஆண்டு கால பழமையான நவாப்கோட்டை கண்டுபிடிப்பு.. திருப்பத்தூரில் ஆச்சரியம் பாருங்க
வேலூர்: தமிழகத்தில், கடந்த 10 வருடங்களாகவே தொடர்ந்து பல இடங்களில் அகழாய்வுகள் நடைபெறுகின்றன. இதில், தமிழகத்தில் கிடைத்துள்ள இரும்பு உலைகள், இரும்பு கசடுகள், இரும்பு கருவிகள் உள்ளிட்டவை, 5,300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்ற தகவல் உறுதியாகி உள்ளது. மேலும், சிந்துவெளியில் கிடைத்துள்ள குறியீடுகளை போன்ற குறியீடுகளும் அதிகளவில் கிடைத்துள்ளன. எனவே, இந்திய வரலாற்று சான்றுகளை மீள் கட்டமைப்பு செய்ய வேண்டிய நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. ஆனால், இப்படிப்பட்ட சூழலில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒரு கண்டுபிடிப்பு நடந்து, தமிழக மக்களுக்கு வியப்பை கூட்டி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழாய்வில் கலந்து கொண்டு பேசியிருந்தார்.

உருக்கு இரும்பு தொழில்நுட்பம்
அப்போது, "5300 ஆண்டுகளுக்கு முன்பே 'உருக்கு இரும்பு தொழில்நுட்பம்' தமிழ் நிலத்தில் அறிமுகமாகிவிட்டது. இப்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு.4000ம் ஆண்டின் முதற்பகுதிக்கு கொண்டு சென்றிருக்கிறது.
தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு அறிமுகம் ஆகியிருக்கிறது என்று உறுதியாக சொல்லலாம். அகழாய்வு செய்யப்பட்ட இடங்களில் இருக்கும் இரும்பு பொருட்களின் உலோகவியல் பகுப்பாய்வும், இரும்புத்தாது இருக்கும் தொல்லியல் தளங்களில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அகழாய்வுகளும் இந்த கண்டுபிடிப்புகளுக்கு மேலும் வலுசேர்க்கும்.. சான்றுகளை வழங்கி தெளிவுபெற வைக்கும்.
எனினும். அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்பு தாதுவில் இருந்து, இரும்பை பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று பெருமிதத்தோடு கூறுவோம்" என்று தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் இப்போதும், வாணியம்பாடியில் ஒரு ஆச்சரியம் நடந்துள்ளது.. அதாவது, வாணியம்பாடி அருகே 300 ஆண்டுகள் பழமையான கோட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.. திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி பேராசிரியர் பிரபு, சமூக ஆர்வலர்கள் முத்தமிழ் வேந்தன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில், இந்த செய்தி தெரியவந்தள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் பிரபு சொல்லும்போது, திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவணப்படுத்தப்படாத எண்ணற்ற வரலாற்று தடயங்களை வெளிப்படுத்தி வருகிறோம்.. அந்த வகையில் தொடர்ந்து கள ஆய்வு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தோம்.
வாணியம்பாடி அருகில் கோட்டை
அப்போது அலசந்தாபுரம் பஞ்சாயத்து உறுப்பினர் தந்த தகவலின்பேரில் வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் சித்தூர் மாவட்டம் லட்சுமிபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வெங்கடராஜபுரம் என்ற ஊரில் சுமார் 800 அடி உயர மலைமேல், கோட்டை ஒன்று இருப்பதை உறுதி செய்தோம்.
பிறகு அந்த கோட்டை அமைந்துள்ள மலை ஆந்திர மாநிலம் லட்சுமிபுரம் பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்டது என்பதையும், அந்த மலையில் கோயில் உள்ளது என்பதையும் கண்டறிந்தோம். எனவே, ஆடிமாத வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்களோடு சேர்ந்து நாங்களும் பயணித்து அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டோம்.
அப்போது கருங்கற்களாலும், சுட்ட செங்கற்களாலும், சுதைக் கலவையினாலும் கோட்டை கட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.. மேலும் அந்த கோட்டையில் ஆயுதக்கிடங்குகளும், மறைவிடங்களும், பீரங்கி மேடைகளும், கண்காணிப்புக் கோபுரங்களும், மதில்களும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.
நீர்த்தேவைக்கு மழைநீர்
நீர்த்தேவைக்கு மழைநீரை முறையான கால்வாய் வாயிலாக வடிந்துவரச்செய்து ஒரு ஊரணியோடு வந்து சேருமாறு சேமித்து வந்துள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இப்பகுதியை கி.பி.17ம் நூற்றாண்டில் திருப்பத்தூரை உள்ளடக்கிய பகுதிகளை ஆட்சி செய்த விஜயநகர அரசின் வழிவந்த ஜெகதேவிராயர் என்ற மன்னர் ஆட்சி செய்தார்.
விஜயநகர மன்னர்கள் ஆட்சியின்போது கட்டப்பட்ட இக்கோட்டையானது, கி.பி.1565ல் விஜயநகர ஆட்சியின் கீழ் சென்று, கி.பி. 1714 இல் சித்தூர் பகுதி நவாப் அப்துல் நபி கான் என்ற நிஜாம் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது.. அவர் மாதகடப்பா, ராமகுப்பம், வெங்கடராஜபுரம் ஆகிய பகுதிகளில் தன்னுடைய ஆளுகையை வலுப்படுத்த 3 கோட்டைகளை கட்டியிருந்தார்.. அதில் ஒன்றுதான் இந்த வெங்கடராஜபுரத்தில் உள்ள நவாப் கோட்டையாகும்.
சிதிலமாகாத ஆச்சரியம்
ஆங்கிலேயர்களின் தாக்குதலில் இநத் கோட்டை என்றோ சிதிலமைந்திருக்க வேண்டும். ஆனால், தமிழக வரலாற்றில் பல கோட்டைகள் குறித்த செய்திகள் பதிவாகியிருந்தாலும், இந்த கோட்டை பற்றி எங்குமே பதிவாகாதது ஆச்சரியமாக உள்ளது.. வரலாற்றின் சாட்சியங்களாக சிதைந்த நிலையில் காணப்படும் இந்த கோட்டை அன்றைய ஆட்சியாளர்களின் வரலாறு, கட்டிடக்கலை குறித்து அறிந்துகொள்ள உதவும் வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும் என்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications