11 சவரன் தங்க நகைகள்.. ஆசை அடங்காத கணவர்.. வேலூர் எஸ்.பி. ஆபீசுக்கு ஓடிய துபாய் நர்ஸ்.. என்னாச்சு?
வேலூர்: துபாய் அபுதாபியில் நர்சாக வேலை பார்த்து வரும் பெண் ஒருவர், வேலூர் மாவட்ட எஸ்பியிடம், கண்ணீர் மனுவை தந்துள்ளார்.. இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கையும் துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. என்ன நடந்தது வேலூரில்?
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக வரதட்சணை விளங்கி கொண்டிருக்கிறது.. இந்தியாவில் வரதட்சணை சட்ட விரோதம் என்று தெரிந்திருந்தும், பெரும்பாலான திருமணங்களில் வரதட்சணை வலிய கொடுக்கப்படுகிறது... பல இடங்களில் கட்டாயப்படுத்தி பெறப்படுகிறது.

மனித உயிர்கள்: இதனால் ஏழைகள் முதல் நடுத்தர மக்கள், பணக்காரர்கள் என பலதரப்பட்ட மக்களும் தங்கள் வசதிக்கு தகுந்தவாறு வரதட்சணை கொடுத்து வருகிறார்கள். ஆனால், இந்த வரட்சணைகளே, மனித உயிர்களை பறித்து கொள்வதும் நடந்து வருகிறது.
சமீபத்தில்கூட, டெல்லி- டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற திருமணத்தின்போது வரதட்சணையாக இரண்டரை கோடி ரொக்கப்பணமாக வழங்கியது குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது. அதில், சூட்கேசில் வைத்து ரூ.2.56 கோடி ரொக்கப்பணத்தை மணப்பெண் வீட்டார் வரதட்சணையாக வழங்கியிருந்தனர். அதைத்தவிர, சம்பிரதாய முறைப்படி ஒரு சடங்கிற்காக ரூ.11 லட்சம் மற்றும் பல்வேறு சடங்குகளுக்கு என ரூ.8 லட்சம் தனித்தனியாக வழங்கப்பட்டது.
வரதட்சணை கொடுமை: இப்படி வரதட்சணை பெறுவதும், கொடுப்பதும் அவரவர் தனிப்பட்ட விஷயம் என்று சிலர் சொன்னாலும், பல்வேறு குற்றசம்பவங்களுக்கு காரணமாகிவிடுகிறபோது, வரதட்சணை என்பது சமூகப்பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. இதோ வேலூர் மாவட்டத்தில் ஒரு பெண், மாவட்ட எஸ்பியிடமே புகார் தந்துவிடடார்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா கொண்டமல்லி கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுக்கு 30 வயதாகிறது.. துபாய் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் உள்ளாவது:
திருமணம்: "நான் பிஎஸ்சி நர்சிங் முடித்து தற்போது துபாய் அபுதாபியில் நர்சாக வேலை செய்து வருகிறேன். நான் பெங்களூரில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்த போது வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா பெரியபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்தேன். 2023ம் ஆண்டு நாங்கள் இரு வீட்டு பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம்.
திருமணத்தின்போது எனக்கு 11 பவுன் தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள், திருமணத்திற்கு 5 லட்சம் ரூபாய் என என்னுடைய பெற்றோர் வழங்கினர். நான் வேலை நிமித்தமாக துபாய் அபுதாபிக்கு சென்று விட்டேன். எனது கணவர் 2 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே நான் பணிசெய்யும் இடத்திற்கு வந்து செல்வார்.திருமணமான சில காலங்களிலேயே எனது கணவர் எனது நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார்.
4 சவரன் நகை: மேலும் வரதட்சணையாக எனது பெற்றோரிடம் கூடுதலாக 4 சவரன் நகை கேட்டு அவர்களை வற்புறுத்தி வருகிறார். மேலும், ஊருக்கு வரும்போது வரதட்சணை கேட்டு என்னை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்தார்.
3 மாத குழந்தையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டி வருகிறார். எனவே எனது கணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கேட்டுக்கொண்டுள்ளார். நர்ஸ் அளித்திருக்கும் இந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications