வேலூரில் விழுந்த "கண்கள்".. குட்நியூஸ் தந்த "அமிர்தி".. குஷியில் குதிக்கும் பொதுமக்கள்.. நாளைக்கா?
வேலூர்: 4 நாள் தொடர் விடுமுறையை கொண்டாடி கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு ஹேப்பி செய்தி வந்துள்ளது.. அதுவும் வேலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலிருந்து..!!
வேலூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அமிர்தி வன உயிரியல் பூங்கா.. இது ஜவ்வாதுமலை தொடரில் சிறிய விலங்குகள் சரணாலயமாக திகழ்ந்து வருகிறது.

கீரிப்பிள்ளைகள்: இந்த பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், குள்ளநரிகள், குரங்குகள், சிவப்புத்தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப்பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் இப்படி ஏராளமான விலங்குகளும், பறவைகளும் உள்ளன.
இந்த பூங்காவிற்குள்ளும், பூங்காவை சுற்றிலும் ஏராளமான ஓங்கி உயர்ந்த மரங்களில், மலர்கள் பூத்து குலுங்குவதை பார்க்கவே, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வருவார்கள்.
விடுமுறை: இந்த பூங்காவை பொறுத்தவரை, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மட்டும் விடுமுறையாகும்.. காரணம், பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்படுகின்றன... மற்றபடி, ஞாயிறு உட்பட எல்லா நாட்களிலுமே இந்த பூங்கா திறந்திருக்கும்... ஆனால், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்கள் வந்தால், அன்றைய தினம் பொதுமக்களின் பார்வைக்காக பூங்கா திறந்து வைக்கப்படும்.
சுற்றுலா பயணிகள்: அந்தவகையில், நாளை, அதாவது செவ்வாய்க்கிழமையன்று, விஜயதசமி தினத்தன்று பூங்கா வழக்கம் போல் செயல்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இதுபோலவே, நாட்டிலுள்ள மிகப் பெரிய மற்றும் பழமையான உயிரியல் பூங்காவான, வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவும் நாளைய தினம் திறந்திருக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது..
வண்டலூர்: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கும், வாரந்தோறும் வாரவிடுமுறை விடப்படுவது வழக்கம். ஆனால், வார இறுதி விடுமுறை மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகள் காரணமாக, தொடர் விடுமுறை விடப்படுவதால், நாளை அதாவது செவ்வாய்க்கிழமை அதிக அளவில் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது 4 நாட்கள் தொடர்விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 12 லட்சம் பேர் படையெடுத்துள்ளனர்... சுற்றுலா தலங்களிலும் மக்கள் குவிந்துள்ளனர். அந்தவகையில், அமிர்தி பூங்காவிற்கும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications