Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூர் மக்கள் நரிமுகத்துல முழிச்சிருப்பாங்க போல.. 1000 ஆயிரம் கேட்டால்.. ரூ.3000 தந்த ஏடிஎம்!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: காசு மேல காசு வந்து.. கொட்டுகிற நேரமிது.. வேலூர் குடியாத்தம் பகுதியில் 1000 பணம் எடுக்க வந்தவர்களுக்கு 3000 ரூபாயை ஒரு ஏடிஎம் தூக்கி கொடுத்துள்ளது. இதனால் உற்சாகம் அடைந்த மக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதுபற்றி தகவல் அறித்த வங்கி அதிகாரிகள் ஏடிஎம்மை மூடினார்கள். கூடுதல் பணம் எடுத்தவர்களிடம் பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்

ஏடிஎம்களில் பணம் எடுக்க போனால், அங்கு பணம் இல்லை என்று பதில் வரும். அப்படி இல்லை என்றால் 500 ரூபாய் தான் இருக்கிறது என்று பதில் வரும். பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம்களில் மட்டுமே 100 ரூபாய் வருகிறது. தனியார் வங்கி ஏடிஎம்களில் 200 அல்லது 500 ரூபாய் தான் பெரும்பாலும் வருகிறது.

Vellore : An ATM has given away 3000 rupees to people who came to withdraw 1000 cash in Kudiatham

பணத்தை மெட்ரோ நகரங்களில் மூன்று முறைக்கு மேல் எடுத்தால் அதற்கு தனியாக கட்டணமும் வசூலிப்பார்கள். உதாரணமாக 25 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். மற்ற பகுதிகளில் என்றால் ஐந்துமுறை எடுக்கலாம். அதற்கு மேல் எடுத்தால் கட்டணம் வசூலிப்பார்கள். இதுதான் நடக்கிறது.

சரி விஷயத்திற்கு வருவோம்.. வேலூர் குடியாத்தம் பகுதியில் 1000 பணம் எடுக்க வந்தவர்களுக்கு 3000 ரூபாயை ஒரு ஏடிஎம் தூக்கி கொடுத்துள்ளது.. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நான்கு முனை கூட்டுச் சாலை பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த ஏ.டி.எம் மையத்தில் உள்ள இயந்திரத்தில், சனிக்கிழமை இரவு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 பணம் எடுத்தபோது ரூ.3000 கிடைத்துள்ளது. இதனால் உற்சாகம் அடைந்தபலரும் தங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு தகவலை தெரிவித்தனர்.

இதையடுத்து பலர் அந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க அங்கு குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குடியாத்தம் நகர காவல் துறையினருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் வங்கி அதிகாரிகளும், காவல் துறையினரும் விரைந்து வந்தனர். ஏடிஎம் இயந்திரத்தை சோதனை செய்து விட்டு உடனடியாக அந்த ஏடிஎம் மையத்தை தற்காலிகமாக மூடினார்கள். மேலும், அங்கு கூடிய கூட்டத்தை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.

இந்த சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசும் போது, "ரூ.1000 வேண்டும் என்றால் ஒரு 500 ரூபாய் நோட்டு, நூறு ரூபாய் நோட்டுகள் ஐந்து என்ற வீதத்தில் வழங்கப்பட வேண்டும். ஆனால், தவறுதலாக ஆறு நோட்டுகளும் 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கி இருக்கிறது.

தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 3 ஆயிரம் ரூபாய் பணம் வந்துள்ளது. கூடுதல் பணம் எடுத்து சென்றவர்கள் அடையாளம் காணப்பட்டு பணத்தை மீட்க நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+