Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று மாப்பிள்ளையாகி மாமியார் வீட்டுக்கு போக வேண்டிய வடிவரசன்.. 'சோனமுத்தா எல்லாம் போச்சா'!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: குடியாத்தம் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடக்க இருந்த மணப்பெண்ணுடன் ஜோடியாக இருப்பது போல் தனக்கு தானே வாழ்த்து போஸ்டர் ஒட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

காதலிக்கு திருமணம் இன்று நடந்த நிலையில், முதல் நாளில், அதாவது நேற்று, காதலி குடும்பத்தை பழிவாங்குவதற்காக , காதலன் செய்த செயல் அந்த பகுதி மக்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது. அவர் மணப்பெண்ணுடன் ஜோடியாக இருப்பது போல் தனக்கு தானே வாழ்த்து தெரிவித்து போஸ்டர் அடித்துள்ளார்.

Vellore Boyfriend arrested for putting up a poster wishing him to stop his girlfriends marriage

இந்நிலையில் வாழ்த்து போஸ்டரை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணப்பெண் வீட்டார், போஸ்டர்களை கிழித்து எறிந்ததுடன், போலீசிடமும் நடந்த சம்பவங்களை கூறினர்கள். இதன் காரணமாக அந்த இளைஞர் சிறையில் கம்பி எண்ணுகிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்மாயில் செம்மண் குட்டையை சேர்ந்தவர் வடிவரசனுக்கு 26 வயது ஆகிறது. வடிவரசன், அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்.

இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் அந்த பெண் வடிவரசனை வேண்டாம் என்று கூறிவிட்டு, குடியாத்தத்தை சேர்ந்த ராணுவ வீரரை திருமணம் செய்ய சம்மதித்துள்ளார். இவர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.

இன்று ராணுவ வீருடன் அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது. முன்னதாக திருமணத்திற்காக ஏற்பாடுகளை பெண் வீட்டார் செய்திருந்தனர்.
இளம்பெண் காதலை கைவிட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்வதை கண்டு வடிவரசன் ஆத்திரம் அடைந்தார்.

மணமகள் வீட்டிற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்தார். இளம்பெண்ணுடன் ஜோடியாக இருப்பது போல் இணைக்கப்பட்ட படத்தை வடிவரசன் போஸ்டர் அடித்தார். அந்த போஸ்டரை குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று போஸ்டரை ஒட்டினார்.

அந்த போஸ்டரில் வாழ்த்துக்கள் நண்பா என அவரது நண்பர்கள் திருமணம் வாழ்த்து தெரிவிப்பது போல் இடம்பெற்று இருந்தது. இதைப் பார்த்த இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஒட்டப்பட்டிருந்த வாழ்த்து போஸ்டர்களை கிழித்தனர். யார் இந்த போஸ்டர் ஒட்டினார்கள் என்று தெரியாமல் தவித்த பெற்றோர் போலீசில் சென்று கூறினார்கள்.

மேலும் நிச்சயம் செய்யப்பட்ட ராணுவ வீரருடன் தங்களது மகளுக்கு திருமணம் நல்லபடியாக நடத்த பாதுகாப்பு வழங்க கோரி பரதராமி போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இது குறித்து டி.எஸ்.பி. ராமமூர்த்தி உத்தரவின் பேரில் பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வடிவரசனை பிடித்து விசாரித்த போது தான் காதலியின் திருமணத்தை நிறுத்த போஸ்டர் ஒட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து வடிவரசனை போலீசார் கைது செய்தார்கள். காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் வாலிபர் தனக்குத்தானே வாழ்த்து போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒருபுறம் எனில் அந்த பெண்ணுக்கு திருமணம் இன்று இனிதே நடந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+