வேலூரில் வீட்டு வாசலில் தெரிந்த காட்சி... முட்டைக்குள் உருவம்... கிட்ட பார்த்து ஆடிப்போன குடியாத்தம்
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் முன்விரோதம் காரணமாக முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் முன்பு செய்வினை செய்யப்பட்ட மந்திரித்த முட்டைகளை வைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோஷியல் மீடியாக்களிலும், அப்பகுதி மக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அப்படி என்ன நடந்தது?
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ஜெகநாதன்.. இவரது மனைவி பெயர் மஞ்சுளா.. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.. தங்களது இரண்டு பெண் பிள்ளைகளுடன் அப்பகுதியில் தம்பதி வசித்து வருகின்றனர்.

முன்பகை - விரோதம்
அதே பகுதியில் முருகன் - நிர்மலா தம்பதியும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த இரண்டு குடும்பங்களுக்கும் கடந்த பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடும், முன்விரோதமும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஒருவரையொருவர் சந்திக்கும் போதெல்லாம் முறைத்து கொள்வார்களாம்... வார்த்தைகளை விட்டு ரோட்டிலேயே தகராறு செய்து கொள்வார்களாம்.. இப்படி நீண்ட கால பகைமை வெளிப்படையாகவே இவர்களுக்குள் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், முருகன் என்பவருக்கு ஜெகநாதன் மீது இருந்த கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததாக தெரிகிறது. முன்னாள் ராணுவ வீரர் என்பதையும் பொருட்படுத்தாமல், அவரையும் அவரது குடும்பத்தையும் மனதளவில் பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் முருகன் வித்தியாசமான திட்டம் ஒன்றை தீட்டியதாக கூறப்படுகிறது.
குட்டிச்சாத்தான் - முட்டைகள்
அதன்படி, செய்வினை செய்யப்பட்ட மந்திரித்த முட்டைகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.
திட்டமிட்டபடி, நள்ளிரவு நேரத்தில் மந்திரித்த முட்டைகளை எடுத்துக் கொண்டு முன்னாள் ராணுவ வீரர் ஜெகநாதன் வீட்டிற்கு சென்ற முருகன், வீட்டின் கேட் வாசலில் மூலைக்கு ஒன்றாக முட்டைகளை வைத்து சென்றுள்ளார்.
அதுமட்டுமல்ல, மனதிற்குள் இருந்த வன்மத்தை வெளிப்படுத்த, அந்த முட்டைகளின் மீது குட்டிச்சாத்தான் போன்ற உருவங்களை வரைந்து, பயத்தை ஏற்படுத்தும் வகையில் வைத்து சென்றதாக கூறப்படுகிறது.
அடுத்த நாள் காலை வழக்கம்போல் வீட்டின் கதவைத் திறக்க வந்த மஞ்சுளா, வீட்டின் முன்பு கிடந்த மந்திரித்த முட்டைகளை பார்த்து அதிர்ச்சியடைந்தார். முட்டைகளின் மீது வரையப்பட்டிருந்த உருவங்களை பார்த்ததும் அவர் மேலும் அச்சமடைந்து உடனடியாக இதுகுறித்து தனது கணவர் ஜெகநாதனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஜெகநாதன் ஆய்வு செய்துள்ளார்.
அப்போதுதான் சிசிடிவி காட்சிகளில், நள்ளிரவில் முருகன் வந்து முட்டைகளை வைத்து சென்றது தெளிவாக பதிவாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெகநாதன், உடனடியாக குடியாத்தம் காவல் நிலையத்திற்கு சென்று சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.
முருகனே எடுத்து செல்ல வேண்டும்
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகநாதன், முருகன் செய்து வைத்த முட்டைகளை அவரே வந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவில், அந்த முட்டைகளை அப்படியே வீட்டின் முன்பே வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்... என்னதான் முன்பகையாக இருந்தாலும், படித்த நபர்கள் இப்படியா செய்வினையை வைத்து கிலியை கிளப்புவது என்று அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்...
நேரடியாக தாக்குதல் நடத்தாமல், செய்வினை போன்ற நம்பிக்கைகளை பயன்படுத்தி குடும்பத்தினரை பதற்றம் மற்றும் குழப்பத்தில் ஆழ்த்தலாம் என்ற தவறான நம்பிக்கையிலேயே, வீட்டின் முன் மந்திரித்த முட்டைகளை வைத்து சென்றதாக போலீசார் கருதுகின்றனர்... இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications