வேலூர் வரும் மக்களுக்கு நற்செய்தி: 5 ஸ்டார் வசதியுடன் குறைந்த வாடகையில் அரசு ஹாஸ்டல்.. வரப்பிரசாதம்
வேலூர்: மத்திய அரசு நிதி ஒதுக்காததால் தமிழகத்தில் 11 ரயில்வே மேம்பாலங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கிடப்பில் உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.. மேலும் பெருமுகையில் ரூ.45.91 கோடியில் கலைஞா் நூற்றாண்டு தங்கு விடுதியை விரைவில் முதலமைச்சர் திறந்து வைக்கப்போவதாகவும் அமைச்சர் நற்செய்தியை வெளியிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்துக்கு மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளிமாவட்ட, மாநிலங்களில் இருந்து வரும் பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக பெருமுகையில் ரூ.45.91 கோடியில் கலைஞா் நூற்றாண்டு தங்கு விடுதி கட்டப்பட்டு வருகிறது. 5 ஏக்கா் பரப்பில் 2 பகுதிகளாக 68,400 சதுர அடியில் தரைதளம், 3 தளங்களில் நவீன வசதிகளுடன் 119 அறைகளுடன் இந்த விடுதி கட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்து.

இந்த கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தாா். பிறகு அவா் செய்தியாளா்களிடம் பேசும்போது, திட்ட பணிகள் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அமைச்சர் எவ வேலு
அமைச்சர் பேசும்போது, வேலூர் மாநகரம் சிஎம்சி மருத்துவமனையால் உலகப் புகழ் பெற்றது.. இங்கு சிகிச்சைக்காகப் பல மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்..
இவர்களில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்குவதற்கு வேலூரில் போதிய விடுதி வசதிகள் இல்லை என்பதாலும், தனியார் தங்கும் விடுதிகளின் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாலும், முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.. இதன் அடிப்படையில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு சார்பில் தங்கும் விடுதி கட்ட முதலமைச்சர் ஆணையிட்டார்.
பெருமுகை பகுதியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில், சுமார் 2,15,278 சதுர அடி பரப்பில் இந்த பிரம்மாண்ட விடுதி வளாகம் பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டுள்ளது.
சிஎம்சி மருத்துவமனை
இந்தக் கட்டுமான பணிகள் அனைத்தும் வரும் பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட வாய்ப்புள்ளது.. இந்த விடுதியை மாநகராட்சி அல்லது சுற்றுலாத்துறை என எந்தத் துறை நிர்வகிக்கும் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார்..
கடந்த ஆண்டுகளில் கிராமப்புற சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 95 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன.. குறிப்பாக, மழைக்காலங்களில் மக்கள் அவதிப்படுவதைத் தவிர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் இருந்த 1100 தரைப்பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
வேலூர் மாநகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க காட்பாடி மற்றும் பள்ளிகொண்டா பகுதிகளில் புதிய புறவழிச்சாலைகள் அமைக்க 102 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.. மத்திய அரசு நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், விதிகளைப் பின்பற்றியே நிலம் கையகப்படுத்தப்படுகிறது.. இதுவரை 70 ரயில்வே மேம்பாலங்களில் 36 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது..
வேலூருக்கு குட்நியூஸ்
11 மேம்பாலங்களுக்கு நிதி ஒதுக்காததால் கிடப்பில் உள்ளது. மீதமுள்ள எல்லா பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டு சா்வீஸ் சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தி திறப்பு விழாவும் செய்துவிட்டோம். வேலூா் மாவட்டத்தில் மேல்பட்டி, கூடாநகரம் ஆகிய 2 ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. வேலூா் மாநகர போக்குவரத்து நெரிசலை குறைக்க சன்பீம் முதல் அரப்பாக்கம் வரையில் சுற்றுச்சாலை அமைக்கப்பட உள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு நிலம் கையகப் படுத்தவில்லை என்று தோ்தலை மனதில் வைத்து கூறுகிறாா். அவர் எதை, எங்கு பாா்த்தார் என தெரியவில்லை. எங்கெங்கு என குறிப்பிட்டு சொன்னால் வருவாய்த்துறை மூலம் நிலங்களை கையகப்படுத்தித்தர தமிழக அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்..
வேலூர் நற்செய்தி
இதில், பெருமுகையில் ரூ.45.91 கோடியில் கலைஞா் நூற்றாண்டு தங்கும் விடுதி விரைவில் திறக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.. காரணம், தனியார் விடுதிகளில் அதிக கட்டணம் செலுத்த முடியாத சூழலில் உள்ள நோயாளிகளின் உதவியாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.
இந்த தங்கும் விடுதியானது ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 119 அறைகளுடன் 250 பேர் தங்கும் வகையில் நவீன வசதிகளுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 119 அறைகள் உள்ளன. குறிப்பாக 250 பேர் தங்கும் வசதி கொண்ட இந்த விடுதியில், தனித்தனி அறைகள், இரட்டைப் படுக்கை அறைகள், விஐபி அறைகள் மற்றும் பல பேர் இணைந்து தங்கும் 'டார்மெட்ரி' வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
நட்சத்திர விடுதி - ஹாஸ்டல் வசதி
இந்த வளாகம் ஒரு ஐந்து நட்சத்திர விடுதிக்கு இணையான வசதிகளுடன், நவீன சமையலறை, உணவகம், சிசிடிவி கண்காணிப்பு மற்றும் துணி துவைக்கும் நவீன இயந்திரங்கள் கொண்ட சலவைக்கூடம் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகளுடன் வரும் ஓட்டுநர்கள் தங்குவதற்கும் தனி வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விடுதி வளாகத்தில் சாதாரண அறைகள் மட்டுமின்றி குடும்ப அறைகள் மற்றும் வசதி படைத்தவர்களுக்கான விஐபி அறைகளும் உள்ளன. மேலும் தங்குபவர்களின் வசதிக்காக நவீன உணவகம் சமையலறை மற்றும் துணி துவைப்பதற்கான நவீன லாண்டரி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
குறைந்த வாடகை
நோயாளிகளுடன் வரும் டிரைவர்கள் தங்குவதற்கென தனி வசதி செய்யப்பட்டுள்ளது இந்தத் திட்டத்தின் ஒரு முக்கியச் சிறப்பாகும். ஒரு ஐந்து நட்சத்திர விடுதிக்கு இணையான தரத்துடன் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதால் தங்குபவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
இதன் மூலம் வேலூர் மாநகரின் தங்குமிடத் தட்டுப்பாடு குறைவதோடு அரசுக்கே சொந்தமான விடுதி என்பதால் முறையான நிர்வாகமும் தூய்மையான பராமரிப்பும் மக்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications