வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் வீடு கட்ட கூடுதலாக 5 ஏரிகளில் மண் எடுக்க கலெக்டர் அனுமதி
வேலூர்: வேலுர் மாவட்டத்தில் மேலும் ஐந்து ஏரிகளில் அனுமதி பெற்று பொதுமக்கள் மண் எடுக்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி அனுமதி அளித்துள்ளார். மண்பாண்டம் செய்பவர்கள், விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு நஞ்சை நிலமாக இருந்தால் 75 கனமீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கனமீட்டரும் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். பொதுமக்கள் வீடு கட்டுதல் போன்ற தங்கள் சொந்த தேவைக்காக 30 கனமீட்டர் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.
வேலுர் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் அரசு அனுமதி அளித்த ஏரிகளில் வண்டல், களிமண் அல்லது கிராவல் மண் எடுக்க விரும்புவோர் tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் (தாசில்தார்) மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- "தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விவசாய நிலத்தை மேம்படுத்த மண்பாண்டங்கள் செய்ய பொதுமக்களின் பொது பயன்பாட்டுக்கு மற்றும் பிற பயன்பாட்டு தேவையான வண்டல் மண், களி மண், மண் ஆகியவற்றை தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள ஏரிகளில் இருந்து எடுக்க கூடுதலாக தகுதி வாய்ந்த 5 ஏரிகள் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி சேக்கனூர் ஒதியத்தூர் ஏரி, மூஞ்சூர்பட்டு ஏரி, விக்கிரமாச்சி ஏரி, கே.வி.குப்பம் ஒதியத்தூர் ஏரி, திருமணி பொன்னியம்மன் ஏரி ஆகிய ஏரிகளில் இருந்து பொதுமக்கள், மண்பாண்டம் செய்பவர்கள், விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு நஞ்சை நிலமாக இருந்தால் 75 கனமீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கனமீட்டரும் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இதுதவிர பொதுமக்கள் வீடு கட்டுதல் போன்ற தங்கள் சொந்த தேவைக்காக 30 கனமீட்டரும், மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானை செய்ய 60 கனமீட்டரும் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதி பெற விரும்புவோர் tnesevai.tn.gov.in -என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து தாசில்தார்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 105 ஏரிகள், குளங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள 303 ஏரிகள், குளங்களில் இருந்து வண்டல் மண், களிமண் ஆகியவற்றை அனுமதி பெற்று எடுத்து பயனடையலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications