8வது பிரசவம்.. "குடும்ப கட்டுப்பாடு" பண்ண சொன்ன வேலூர் டாக்டர்.. அடுத்த செகண்ட் மனைவி செய்த காரியம்
வேலூர்: பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிறைமாத கர்ப்பிணியான அமுதா என்ற பெண் திடீரென மாயமானதால், வேலூர் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. அடுத்து என்ன ஆனது? வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ளது மேல்ஆலாங்குப்பம்.. இந்த கிராமத்தில் வசித்து வரும் தம்பதி பிரசாந்த் - அமுதா.. இப்போது 29 வயதாகிறது.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே 7 குழந்தைகள் பிறந்தன.. இதில், 2 குழந்தைகள் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டன.. தற்போது 5 குழந்தைகளும் நலமாக உள்ளனர்.. பிரசாந்த் ஒரு கூலித்தொழிலாளி ஆவார்..
கூலித்தொழிலாளி: எனினும் குடும்ப வறுமை காரணமாக, அமுதாவும், 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் அமுதா 8வது முறையாக கர்ப்பமானார்.
இதையடுத்து, அருகிலுள்ள மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.. அமுதாவுக்கு நிறைமாதம் என்பதால், வேலூர் காக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.. 8வது பிரசவம் என்று தெரிந்ததுமே அங்கிருந்த டாக்டர்கள், பிரசவம் முடிந்ததுமே, குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்..
குடும்ப கட்டுப்பாடு: இதைக்கேட்டு அமுதா அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது.. குடும்ப கட்டுப்பாடு செய்யவும் விரும்பவில்லை போலும்.. இதனால், பிரசவம்கூட முடியாமல், கடந்த 4ம் தேதியே, தன்னுடைய கணவரை அழைத்துக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் அந்த மருத்துவமனையிலிருந்து நிறைமாத கர்ப்பிணியாகவே வெளியேறி விட்டாராம்..
பிரசவ வார்டில் அமுதாவை காணோம் என்றதுமே, பதறிப்போன டாக்டர்கள், மருத்துவமனை முழுக்க தேடினார்கள்.. எங்குமே அமுதா இல்லை என்பதால், உடனடியாக மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் செல்வி, விஏஓ உதயகுமார், நர்ஸ் விஜயகுமாரி, கலைவாணி, சுகாதார ஆய்வாளர் அஜித் ஆகியோர் கொண்ட குழுவினர் உடனடியாக மேல்ஆலாங்குப்பம் கிராமத்திலுள்ள அமுதா வீட்டுக்கு விரைந்து சென்றார்கள்.
விழிப்புணர்வு: சமூகத்தின் பொருளாதார நிலை குறித்தும், குடும்ப சூழல் குறித்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தி, இனிமேல் தங்கள் குடும்பத்திற்கு தேவையானவைகளை கருத்தில் கொண்டு குடும்ப கட்டுப்பாட்டில் பங்கெடுக்க வேண்டும் என்றும் தம்பதியருக்கு அதிகாரிகள் அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.. பிறகு, அமுதாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து, பிரசவத்துக்காக அனுமதித்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications