வேலூர் துரைமுருகனின் வலதுகரம்.. பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் பரபரக்கும் ரெயிடு.. 3 காரில், 6 ஆபீசர்ஸ்
வேலூர்: திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்க துறையினர், இன்று காலையிலிருந்து திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இது வேலூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக உள்ளவர் பூஞ்சோலை சீனிவாசன்.. திமுகவில் மாவட்ட பொறுப்பில் பதவி வகித்து வருகிறார். இவர் மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது வேலூர் தொகுதியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்ற புகாரின்பேரில், துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள். இதில், துரைமுருகன் வீட்டில் இருந்து 10 லட்சத்து 57 ஆயிரத்து 10 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
குடோன்கள்: அதேபோல, துரைமுருகனின் நெருங்கிய கட்சிப் பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவரது உறவினருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட 6 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மூட்டை மூட்டையாகவும். பெட்டி பெட்டியாகவும் 11 கோடியே 51 லட்சத்து 800 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். அதேபோல, வேலூர் தொகுதி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் விவரங்களுடன் கூடிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் சுமார் ரூ.9 கோடி அளவுக்கு புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதுமட்டுமல்ல, தேர்தல் நேரத்தில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் காட்பாடி காந்தி நகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.
ரூபாய் நோட்டு: இதையடுத்து, கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவாகி, விசாரணையும் நடந்தது. பூஞ்சோலை சீனிவாசனுக்குப் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் எப்படிக் கைமாறின? தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்தெல்லாம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், இவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையை மேற்கொண்டுள்ளனர். பள்ளிகுப்பம் நடு மோட்டூர் பகுதியில் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு: இன்று காலை சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு படையினருடன் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிற்கு வருகை தந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சோதனை நடத்தி வருகின்றனர். 3 கார்களில் சுமார் 6 அதிகாரிகள் சிஆர்பிஎப் வீரர்களுடன் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் பாதுகாப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications