வேலூருக்கு நற்செய்தி.. இன்னும் 2 மாசம்..விரைவில் வருகிறது அறிவிப்பு.. சென்னை, பெங்களூருக்கும் ஹேப்பி
வேலூர்: வேலூருக்கு குட்நியூஸ் வரப்போகிறது.. அதற்கு இன்னும் மாதங்களே உள்ளதால், ஒட்டுமொத்த மாவட்ட மக்களும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார்கள்.
வேலூர் அப்துல்லாபுரத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது... மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் இந்த விமான நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர அன்றே முடிவு செய்யப்பட்டது.இதற்காகவே, கடந்த 2016-ல், ஆயத்த பணிகளும், பல்வேறு கட்ட பணிளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்காகவே, பொதுமக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. தார் வழி சாலையும் விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்டது.

ஏர்போர்ட்: ஓடுதளம், டெர்மினல் கட்டப்பட்டது.. மேலும், டம், தளவாட கருவிகள், பயணிகள் காத்திருக்கும் ரூம் போன்றவையும் அமைக்கப்பட்டது.. ஆனால், திடீரென பணிகளில் தொய்வு ஏளற்பட்டுவிட்டது.. மேலும், இந்த விமான நிலையத்தின் செயல்பாட்டுக்கு கூடுதலாக சுமார் 10 ஏக்கர் நிலமும் தேவையாக இருந்தது. எனவே, அதை கையகப்படுத்துவதிலும் சில பல சிக்கல்கள் எழவும், அடுத்த பணிகளும் கிடப்பில் போடப்பட்டு, நாட்களும் கழிந்தன..
பராமரிப்பு பணிகள்: இதனால், ஓடுதள பகுதிகள் உள்ளிட்ட சுற்றியுள்ள இடங்களில் செடி, கொடிகள் முளைக்க தொடங்கிவிட்டன.. இதனால், அந்த பகுதியே பராமரிப்பில்லாமல் காணப்பட்டது.
10 ஏக்கர் தேவையாக இருந்த நிலையில், கடைசிவரை நிலம் கிடைக்கவில்லை. அதனால், இருக்கும் இடத்தை வைத்துக்கொண்டு ஏர்போர்ட் பணிகளை முடிக்கலாம் என்று முடிவானது. இதற்கு பிறகு, மறுபடியும் வேலூர் ஏர்போர்ட் பணிகள் ஆரம்பமாகின.. மின் கம்பங்களும் அகற்றும் பணிகள் உட்பட பல்வேறு பணிகள் துரிதமாக ஆரம்பமாகின.. இப்போது, ஏர்போர்ட் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறதாம்..

வேலிகள்: ஏர்போர்ட்டை சுற்றிலும் இரும்பு கம்பிகளினால் வேலி போடப்பட்டு வருகிறது.. இதுதான் கடைசி பணி என்கிறார்கள்.. இந்த பணியும் முடிந்துவிட்டால், ஏர்போர்ட் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதனால் பெங்களூர் - சென்னை சென்று வருவதற்கான பயண நேரம் 4 மணி நேரமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, இந்த வேலூர் ஏர்போர்ட்டுக்கு பயணிகள் எளிதாக வந்து செல்வதற்காக, சென்னை மற்றும் பெங்களூர் சாலையை இணைக்கும் இன்னொரு சாலையும் அமைக்கப்பட்டு உள்ளதாம். எப்படியும், 2 மாதத்திற்குள் ஏர்போர்ட் துவங்கப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் நம்பிக்கையாக சொல்கிறார்கள். இந்த ஏர்போர்ட் மட்டும் வந்துவிட்டால், வேலூர் மாவட்டத்துக்கே மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications