"விட்ரு செல்லம், நீ நல்லா சாப்பிடு".. வேலூருக்கு வந்த விநோத பெண்.. கையில் கட்டைப் பை.. அதுக்குள்ளே?
வேலூர்: வேலூர் அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது.. இதையடுத்து, மருத்துவமனையில் போதிய பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன்... இவர் ஒரு விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி பெயர் சின்னி.. 20 வயதாகிறது.. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில், சின்னிக்கு கடந்த 28ம்தேதி ஆண் குழந்தை பிறந்தது.

பச்சிளம் குழந்தை: இதையடுத்து, தாய்க்கும், குழந்தைக்கும், வார்டிலேயே சிகிச்சை தரப்பட்டும் வந்தது... இந்நிலையில் நேற்று காலை குழந்தையை காணவில்லை.. இதனால் பதறிப்போன சின்னி கதறி கதறி அழுதார்.. இதையடுத்து, குழந்தை என்ன ஆனது? என்று டாக்டர்களும், நர்ஸ்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் என மொத்த பேரும் தேடினார்கள்.. இதுகுறித்து விசாரித்தபோதுதான், குழந்தையை யாரோ கடத்தி சென்றிருப்பது தெரிய வந்தது.
உடனே இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தரப்பட்டது.. போலீசாரும் மருத்துவமனைக்கே நேரடியாக வந்து விசாரணை மேற்கொண்டு, மருத்துவமனை பகுதிகளிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தனர்...
சிறுவன் யார்: அப்போதுதான் பிரசவ வார்டுக்குள் ஒரு பெண் நுழைவது பதிவாகியிருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்.. அந்த பெண், பிரசவ வார்டுக்குள் வந்து, அடுத்த சில நிமிடத்திலேயே ஒரு கட்டை பையுடன் வெளியே செல்வதும் பதிவாகியிருந்தது. அந்த பெண்ணுடன் ஒரு சிறுவனும் நடந்து சென்றுள்ளான்...
அந்த பெண் இந்த மருத்துவமனையின் நோயாளி கிடையாது.. அட்மிட் ஆகியிருக்கும் நோயாளியை சந்திப்பதற்காக வந்தவரும் கிடையாது.. வார்டுக்குள் இருந்து வெளியே செல்லும்போது, கட்டைப்பையை கொண்டு சென்றிருப்பதால், ஒருவேளை பையில் குழந்தையை வைத்து கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. எனவே, அந்த பெண்ணை இப்போது தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள்.
சாப்பாடு: இந்நிலையில், இதுகுறித்த கூடுதல் தகவலும் வெளியானது.. 28ம் தேதி குழந்தை பிறந்ததுமே, குழந்தை நல வார்டுக்கு குழந்தையுடன் சின்னு மாற்றப்பட்டிருக்கிறார்.. நேற்று காலை 7:15 மணிக்கு சின்னுவின் கணவர் சாப்பாடு வாங்கி தந்துவிட்டு, மறுபடியும் வெளியே சென்றுவிட்டாராம்.
அப்போது சின்னு சாப்பிடும்போது, யாரோ ஒரு பெண், தானாகவே வலிய வந்து சின்னுவிடம் பேசினாராம்.. நைசாக பேச்சு தந்து, குழந்தையை கவனித்து கொள்வதாக சொன்னாராம். அப்போது சின்னு, சாப்பிட்டுவிட்டு கை கழுவிக் கொண்டு வருவதாக சென்றிருக்கிறார்.. திரும்பி வந்து பார்த்தபோதுதான், குழந்தையுடன் அந்த பெண் மாயமானதாக கூறுகிறார்கள்.
எங்கே அந்த பெண்: வார்டுக்குள் நுழைந்த அந்த பெண்ணுக்கு 50 வயது இருக்குமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையிலிருந்து கட்டைப்பையுடன் வெளியே செல்கிறாராம்.. அந்த பெண் கொண்டு சென்ற பையில்தான் குழந்தை இருக்கும் என நம்பப்படுகிறது. அதனால், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பெண்ணை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கிடைக்கவில்லை.
ஆனால், அரசு மருத்துவமனையில் எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாக இருந்தார்கள் என்பதுதான் அதிர்ச்சியாக உள்ளதாம்.. இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் சொல்லும்போது, "எப்போதுமே குழந்தைகள் நல வார்டில், இதுபோன்ற பிரச்சனைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், குழந்தைகளை கண்காணிப்பதற்காகவே, ஆர்எஃப்ஐடி என்ற அடையாள "டேக்" குழந்தைகளின் கைகளில் கட்டப்படும்.
அலாரம் சத்தம்: ஒருவேளை வார்டிலிருந்து குழந்தைகள் வெளியே சென்றால், அலாரமும் ஒலிக்கும். இந்த குழந்தையின் கையிலும் அப்படித்தான் டேக் கட்டிவிட்டுள்ளார்கள்.. ஆனால், குழந்தையின் கையிலிருந்த அந்த டேக்கை, பெற்றோரே கழற்றி வைத்திருக்கிறார்கள்.. அதனால்தான் குழந் தையை தூக்கிச்செல்லும்போது அலாரமும் ஒலிக்கவில்லை.
இருந்தாலும், டியூட்டியில் இருந்த செக்யூரிட்டி இதையெல்லாம் கவனித்திருக்கலாம்.. இந்த விஷயத்தில் கவனக்குறைவாக இருந்த செக்யூரிட்டி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது... அதேபோல, மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" என்கிறார்கள்.
அதிரடி கைது: இந்நிலையில், குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கண்டுபிடித்துவிட்டார்கள்.. வேலூர் மாவட்டம் இடையன்சாத்து பகுதியைச் சேர்ந்த இந்த பெண்ணை பெங்களூருவில் தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்..
இதையடுத்து, அந்த பெண்ணிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.. அப்போது, கர்நாடகாவில் பணிப்பெண்ணாக பணிபுரிந்ததாகவும், தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளருக்கு கொடுப்பதற்காக குழந்தையை கடத்தியதாகவும் கைதான பெண் வாக்குமூலம் அளித்திருக்கிறார்..
சபாஷ்: இந்த கடத்தல் தொடர்பாக கர்நாடகா மாநிலம் சிக்மகளூரைச் சேர்ந்த மேலும் 3 பேரையும் போலீசார் கைது செய்ததுள்ளனர்.. கைதான 4 பேரையும் வேலூருக்கு தனிப்படை போலீசார் அழைத்து வருகின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தினால்தான், இன்னும் எத்தனை குழந்தைகளை இப்படி கடத்தியிருக்கிறார்கள் என்பது தெரியவரும். ஆனால், குழந்தை கடத்தப்பட்டு, அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளேயே நம்முடைய போலீசார் கண்டுபிடித்து, குற்றவாளியை கைது செய்திருக்கிறார்கள்.. சபாஷ்...!!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications