வேலூர் சாந்தினியை நம்பவே கூடாது.. கரூரில் ஒரே நாளில் அதிரடி.. பெண்கள் மீது யாரும் "கை" வைக்க கூடாது
வேலூர்: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும் கயவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், வேலூர் & கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு நடந்த சம்பவம் இதுவாகும்.. வேலூர் பகுதியில் வசித்து வருபவர் சாந்தினி.. இவருக்கு 22 வயதாகிறது.. கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த ஜெகன் (22) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் சாந்தினிக்கு பழக்கமானார்.. இதையடுத்து, தன்னுடைய காதலை ஜெகனிடம் சொன்னார் சாந்தினி.. இதனால், ஜெகனும் சாந்தினியை காதலித்தார்.

காதல் ஜோடி
கடந்த 2022ம் ஆண்டு ஜெகனை, வேலூருக்கு சாந்தினி வரவழைத்தார். அப்போது, சாந்தினி தன்னுடைய தோழி என்று, 16 வயது சிறுமியை ஜெகனுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.. அந்த சிறுமி 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.. இதற்கு பிறகு அந்த சிறுமியை திடீரென காணவில்லை.
மகளை காணாமல் பெற்றோர் பல இடங்களில் தேடினார்கள்.. இறுதியில் வேலூர் தெற்கு போலீசில் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் போலீசாரும் காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர்.. அத்துடன் சிறுமி யார் யாருடன் பழகி வந்தார் என்ற விவரங்களையும் சேகரித்தனர்..
மாயமான சிறுமி
அப்போதுதான், ஜெகன், சாந்தினி இருவருமே சிறுமியுடன் நட்பில் இருந்தது தெரியவந்தது. உடனே அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோதுதான், சிறுமியை கடத்தி சென்று, ஜெகன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதும் தெரிய வந்தது. இதையடுத்து, குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெகனையும், சாந்தினியையும் கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். ஜெகன் மற்றும் சாந்தினி மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் ஜெகனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும், சாந்தினிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 2 அதிரடி
அதேபோல, கரூர் மாவட்டத்தில் 2 போக்சோ கேஸில், ஒரே நாளில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது... கரூர் மாவட்டம், ராயனூர் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020 ஆகஸ்ட் 14ம் தேதி, ஒரு சிறுமியை கடத்தி, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக, கரூர் அனைத்து மகளிர் போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கரூர் கூடுதல் அமர்வு மகிலா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தான்தோன்றிமலை வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த நிஷாந்த் (வயது 24), குறிஞ்சி நகர் அரவிந்த் (வயது24), திருக்காம்புலியூர் வசந்த் என்கிற வசந்தகுமார் (வயது 24) பெருமாள்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த கலைவாணன் (வயது 29), மருதம்பட்டி காலனி கோகுல்நாத் (வயது 24), வையாபுரி நகர் பார்த்திபன் (வயது 31) ஆகிய 6 பேர் கூட்டாக சேர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, குற்றபத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று முடிந்தது.

தீர்ப்பு தந்த நீதிபதி
இந்நிலையில், மாவட்ட கூடுதல் அமர்வு மகிலாநீதிமன்ற நீதிபதி தங்கவேல் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட நிஷாந்த் மற்றும் அரவிந்த் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 1000 அபராதமும், வசந்த் என்கிற வசந்தகுமார், கலைவாணன், கோகுல்நாத் மற்றும் பார்த்திபன் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதே போல, கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம், 19-ம் தேதி 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக, கரூர் அனைத்து மகளிர் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கரூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற அமர்வில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
20 வருடம் தண்டனை
அந்த வழக்கின் விசாரணையும் முடிவுக்கு வந்தது.. அதில், நீதிபதி தங்கவேல் நேற்றைய தினம் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 7 லட்சம் நிவாரண தொகை வழங்கவும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்துல் சமத் (வயது 59) என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கி கரூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி தங்கவேல் தீர்ப்பு வழங்கினார்.
மேற்கண்ட இந்த 2 வழக்குகளிலும் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். ஒரே நாளில் இரண்டு வழக்குகளிலும் நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது, கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான சட்டம்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. பெண் குழந்தைகளை பாதுகாக்க, போக்சோ சட்டத்தை, தமிழக அரசு திறம்பட அமல்படுத்தி வருகிறது. இந்த சட்டம் குறித்து, சமூகநலம், பள்ளிக்கல்வி, காவல், சட்டம், நீதித்துறை என, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வாலும், சட்ட அமைப்புகள் மீது ஏற்பட்ட நம்பிக்கையாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து புகார் தெரிவிக்கின்றனர். அந்த அளவுக்கு பாதுகாப்பான சூழல் தமிழகத்தில் உள்ளது. 18 வயதுக்கு உட்பட்டோர் காதல் திருமணம் செய்தால், அந்த வழக்குகளும், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன.
இவ்வளவு சட்டதிட்டங்கள், விதிமுறைகள் இருந்தாலும், போக்சோவில் கைதாபவர்களின் எண்ணிக்கை பெருகியபடியே உள்ளது.. போக்சோவில் கைதாகி சிறைசெல்வோருக்கு நீதிமன்றங்களும் தண்டனைகளை வழங்கி வருவது, பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு ஆறுதலை தருகிறது என்றாலும், போக்சோ கைது நடவடிக்கைகள் அதிகரிப்பது கலக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. எனவே, போக்சோ தண்டனைகளை இன்னும் கடுமையாக்கலாம் என்ற கருத்தும் வலுத்து வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications